[X] Close

18 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவு: சில்லரை பணவீக்கம் 2.19%


panaveekam

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 15 Jan, 2019 08:46 am
  • அ+ அ-

நாட்டின் சில்லரை பணவீக்கம் 2018 டிசம்பர் மாதத்தில் 2.19 சதவீதாக இருந்தது. கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவாகும் இது. பழங்கள், காய்கறிகள் மற்றும் எரிபொருள் விலைகுறைவு காரணமாக பணவீக்கம் குறைந் துள்ளது.

நுகர்பொருள் விலைகுறியீட் டெண் (சிபிஐ) அடிப்படையில் பண வீக்கம் கணக்கிடப்படுகிறது. இது நவம்பர் மாதத்தில் 2.33 சதவீத மாக இருந்தது.

2017-ம் ஆண்டு டிசம் பரில் இது 5.21 சதவீதமாக இருந் தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2017 ஜூன் மாதத்தில் மிகக் குறைந்த அளவாக பணவீக்கம் 1.46 சதவீத அளவுக்கு இருந்தது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை வெளி யிட்ட தகவலின்படி உணவுப் பொருள் பண வீக்கம் டிசம்பரில் 2.51சதவீதமாக இருந்தது. அது நவம்பரில் மைனஸ் 2.61 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

காய்கறிகள் மற்றும் புரதம் நிறைந்த முட்டை உள்ளிட்ட உண வுப் பொருள்களின் விலை குறைந் ததும் சரிவுக்கு முக்கியக் காரண மாகும். இருப்பினும் இறைச்சி, மீன் மற்றும் தானியங்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.

டிசம்பரில் எரிபொருள் பண வீக்கம் 4.54 சதவீதமாக இருந்தது. இது நவம்பரில் 7.39 சதவீதமாக இருந்தது.

மொத்த விலை அடிப்படை யிலான பணவீக்கம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக 3.80 சதவீத அளவுக்குக் குறைந் துள்ளது. ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் நவம்பரில் 4.64 சதவீதமாக இருந்தது. கடந்த 2017 டிசம்பரில் இது 3.58 சதவீதமாக இருந்தது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close