[X] Close

2018-19-ம் நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைப்பது சவாலானது: பொருளாதார நிபுணர்கள் கருத்து


controlling-the-fiscal-deficit-for-the-financial-year-2018-19-is-challenging

கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 14 Jan, 2019 10:43 am
  • அ+ அ-

2018-19 நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கை அரசு கட்டுக்குள் வைப்பது சவாலான காரியம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு 2018-19 நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக இலக்கு வைத்துள்ளது. அல்லது ரூ. 6.24 லட்சம் கோடியாக இருக்கும் எனக் கூறியுள்ளது. ஆனால், ஜிஎஸ்டி வருவாயில் ஏற்பட்டுள்ள இழப்பு, அதிகரிக்கும் செலவினங்கள் மற்றும் உற்பத்தி வளர்ச்சி குறைவு உள்ளிட்டக் காரணங்களால் இந்த இலக்குக்குள் அரசு நிதிப் பற்றாக்குறையை வைத்திருப்பது சவாலானதாகவே இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

விரைவில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசு நிதிப் பற்றாக்குறையை இலக்குக்குள் கொண்டுவருவோம் என தெரிவித்தது. கடந்த மாதம் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் மிகுந்த நம்பிக்கையுடன் நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவீதத்துக்குள் கொண்டுவருவோம் எனக் கூறினார். ஆனால், அது கடினமானது. நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதத்துக்கு உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த நிதி ஆண்டில் கடந்த நவம்பர் வரையிலான காலகட்டம் வரையில் அரசின் நிதிப் பற்றாக்குறை, இந்த நிதி ஆண்டுக்கான கணிப்பில் 114.8 சதவிதத்தை எட்டிவிட்டது. அதாவது ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் நிதிப் பற்றாக்குறை ரூ. 7.16 லட்சத்தை அடைந்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் சற்று அதிகம். அரசுக்கு வரும் வருவாயைப் பொறுத்தவரை பிரதானமாக மறைமுக வரிகள் மற்றும் பங்கு விலக்கல் மூலமாக வரும் வரி அல்லாத வருவாய் ஆகும்.

இதில் ஜிஎஸ்டி வரி வருவாய் குறைவாகவே உள்ளது. கலால் வரி குறைவாக உள்ளது. ஏனெனில், உற்பத்தி துறை வளர்ச்சி குறைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் 17 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்து 0.5 சதவீதமாக உள்ளது. பங்கு விலக்கல் இலக்கையும் அரசு எட்டவில்லை. அதேசமயம் மானிய செலவினங்கள் அதிகமாக உள்ளன. கடன் தள்ளுபடி அதிகம் உள்ளது. இந்த நிலையில் அரசு இலக்கு வைத்துள்ள நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 3.3 சதவிதம் என்ற நிலைக்குள் இருப்பது சவாலானது. 3.5 சதவீதத்துக்கு உயர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.

ஐஆர்ஆர் என்ற இந்திய ரேட்டிங் அண்ட் ரிசர்ச் அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்கு ரூ. 39,900 கோடி கூடுதலாகலாம் எனக் கூறியுள்ளது. இந்த நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதமானால், தொடர்ந்து மூன்று நிதி ஆண்டுகளாக நிதிப் பற்றாக்குறை அதிகமாவதாகக் கருதப்படும். நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகமாவது நாட்டின் நிதி நிலைக்கு நல்லதல்ல என்கின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close