[X] Close

தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியால் எல்ஐசியின் சந்தை பங்களிப்பு குறைகிறது


lic-s-market-share-decreases-due-to-the-development-of-private-enterprises

  • kamadenu
  • Posted: 14 Jan, 2019 10:38 am
  • அ+ அ-

தனியார் காப்பீடு நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியில் அதிக தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளதால் அரசுக்குச் சொந்தமான காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் சந்தை பங்களிப்பு 2017-18-ல் 70 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

காப்பீடுக்கான பிரீமியம் வருவாய் அடிப்படையில், 2016-17 நிதி ஆண்டில் தனியார் காப்பீடு நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு 28.19 சதவீதமாக இருந்தது. இது 2017-18 நிதி ஆண்டில் 30.64 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக எல்ஐசி நிறுவனத்தின் சந்தைபங்களிப்பு 71.81 சதவீதத்திலிருந்து 69.36 சதவீதமாகக் குறைந்துள்ளது. தனியார் காப்பீடு நிறுவனங்கள் தங்கள் தொழிலை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல மிகவும் தீவிரமாக இயங்கி வருகின்றன.

இதனால் நாட்டின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் சந்தை பங்களிப்பு குறையத் தொடங்கியுள்ளது. பாலிசி விற்பனையிலும் எல்ஐசியின் பங்களிப்பு குறையத் தொடங்கியுள்ளது. 2017-18 நிதி ஆண்டில் மொத்தமாக 281.97 லட்சம் பாலிசி திட்டங்கள் விற்பனையாகியுள்ளன. இதில் 213.38 பாலிசி திட்டங்களை எல்ஐசி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அதாவது 75.7 சதவீதம். தனியார் காப்பீடு நிறுவனங்கள் 68.59 லட்சம் பாலிசிகளை விற்றுள்ளன. தனியார் நிறுவனங்களின் பாலிசி விற்பனை வளர்ச்சி 8.47 சதவீதமாக உள்ளது. ஆனால், எல்ஐசியின் பாலிசி விற்பனை வளர்ச்சி 5.99 சதவீதமாக உள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close