[X] Close

வீடு வாங்குவோர் அதிகரித்திருப்பதால் வீடு விற்பனை 7.2 சதவீதம் உயர்வு


real-estate-sales-rose-7-2-percent

  • kamadenu
  • Posted: 14 Jan, 2019 10:35 am
  • அ+ அ-

2018-ம் ஆண்டில் வீடுகளுக்கான தேவை நன்றாக இருந்ததால் வீடுகள் விற்பனை 9 முக்கிய நகரங்களில் 7.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதேசமயம் புதிய கட்டுமான திட்டங்கள் 22 சதவீதம் குறைந்துள்ளது.

பிராப் ஈக்விட்டி என்ற அனாலிட்டிக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ல் அப்படியே குடியேறும் வீடுகளுக்கான தேவை அதிகமாக இருந்தது. இதனால், வீடுகள் விற்பனை கணிசமாக உயர்ந்தது. இந்த ஆண்டில் குருகிராம், நொய்டா, மும்பை, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு, தானே மற்றும் சென்னை ஆகிய 9 முக்கிய நகரங்களில் 2.15 லட்சம் வீடுகள் விற்பனை ஆகியுள்ளன.

எண்ணிக்கை குறைவுஅதேசமயம், புதிதாக சந்தைக்கு வரும் கட்டுமான திட்டங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 2017-ம் ஆண்டில் 1.87 லட்சமாக இருந்த புதிய கட்டுமான திட்டங்களின் எண்ணிக்கை 2018-ல் 1.46 லட்சமாகக் குறைந்துள்ளது. வீடுகள் விற்பனை அதிகரித்ததாலும், புதிய கட்டுமான திட்டங்கள் குறைந்ததாலும், விற்காமல் தேங்கும் வீடுகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இது 10 சதவீதம் குறைந்து டிசம்பர் 31, 2018 நிலவரப்படி 6 லட்சமாக உள்ளது. இதுகுறித்து பிராப் ஈக்விட்டி நிறுவனர் சமீர் ஜசுஜா கூறியதாவது, “2018-ல் முன்னணி 9 இந்திய டெவலப்பர் நிறுவனங்களிடமிருந்து வரும் புதிய கட்டுமான திட்டங்கள் மட்டுமே 20 சதவீதம் குறைந்துள்ளது. புதிய திட்டங்களைக் கொண்டுவராமல் ஏற்கெனவே உள்ள வீடுகளை விற்பதில் தீவிரமாக உள்ளனர். இதனால் விற்காமல் தேங்கும் வீடுகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது” 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close