[X] Close

தவறான இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை சாதனம்; ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தது: உச்ச நீதிமன்றம் நடவடிக்கை


wrong-hip-replacement-surgery-device

உச்ச நீதிமன்றம் : கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 12 Jan, 2019 11:37 am
  • அ+ அ-

தவறான இடுப்பு மாற்று சிகிச்சை கருவி தயாரித்து அளித்த அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

இந்நிறுவனத்துக்கு எதிராக ரூ. 1.22 கோடி இழப்பீடு கேட்டு அருண் கோயங்கா என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி எஸ்.கே. கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இழப்பீடு விவரம் திருப்திஇடுப்பு மாற்று சிகிச்சையில் தவறான கருவி பொருத்தப்பட்டது தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக நேற்று மத்திய சுகாதார அமைச்சகம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட இழப்பீடு விவரம் திருப்தி அளிப்பதாகக் கூறி நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், இழப்பீடு குறித்த விவரத்தை மத்திய அரசு விரிவாக வெளியிட வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் பயனடையும் வகையிலும் அவர்களது குறையை போக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தின.

பொதுநல மனுவில் தவறுதலான, உயிருக்கு அச்சுறுத்தலாகஅமைந்த இந்த இடுப்பு மாற்று சாதனம் 2005-ம் ஆண்டிலிருந்து இதுவரையில் 4,525 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close