[X] Close

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளில் பாதுகாப்பான பரிவர்த்தனைக்கு டோக்கன்: ரிசர்வ் வங்கி திட்டம்


token-for-secure-transactions-in-credit-card-and-debit-cards

ரிசர்வ் வங்கி : கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 12 Jan, 2019 11:34 am
  • அ+ அ-

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், இ-வாலட்டுகள் போன்றவற்றில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற ரிசர்வ் வங்கி டோக்கன் வழங்கும் முறையைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

விசா, மாஸ்டர் கார்டு உள்ளிட்ட நிறுவனங்கள் பணமில்லா வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை வழங்குகின்றன. இந்தக் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், இ-வாலட்டுகள் போன்றவற்றில் பரிவர்த்தனை செய்து பொருள்கள், சேவைகளைப் பெறுகிறோம். சில சமயங்களில் நம்முடையகார்டு விவரங்களை அடுத்தடுத்த பரிவர்த்தனைகளுக்காக சேமித்து வைப்பதுண்டு. அப்படி சேமிக்கப்படும் கார்டு விவரங்கள் பாதுகாப்பாக இருக்குமா என்பதில் சந்தேகம்உள்ளது.

எனவே, கார்டு விவரங்கள்திருடப்படாமல் பார்த்துக்கொள்ளவும், பணப் பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகிறது. அதன்ஒரு பகுதியாக, கார்டு பரிவர்த்தனைகளுக்கு டோக்கன் வழங்கும் முறையைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதாவது, கார்டுகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு கார்டுக்கும் ஒரு பிரத்யேக டோக்கன் எண்ணை ஜெனரேட் செய்வதற்கான அனுமதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். 16 இலக்கம் கொண்ட அந்த டோக்கன் எண்ணைப் பயன்படுத்தி நம்மால் பணப் பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும். அப்படி செய்யும்போது நம்முடைய கார்டு விவரங்களை வழங்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய கார்டு விவரங்கள் இதன் மூலம் பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டோக்கன் எண்ணை உருவாக்கவும், ரத்து செய்யவும் வாடிக்கையாளருக்கு அந்தந்த கார்டு நிறுவனங்கள் அனுமதி அளிக்கும். அதனை வாடிக்கையாளரின் பான் எண்ணை வைத்துசெயல்படுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளது. இந்த டோக்கன் முறையிலான பரிவர்த்தனையிலும், ஒன் டைப் பாஸ்வேர்டு போன்ற இரண்டாம் கட்ட உறுதிபடுத்தல் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close