[X] Close

சிறு, குறுந் தொழில்களுக்கான ஜிஎஸ்டி வரம்பு: ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக அதிகரிப்பு


gst-for-small-and-small-businesses

  • kamadenu
  • Posted: 11 Jan, 2019 11:55 am
  • அ+ அ-

சிறு, குறுந் தொழில்களுக்கான ஜிஎஸ்டி விலக்கு வரம்பை மத்திய அரசு இரண்டு மடங்காக உயர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். முன்பு ரூ. 20 லட்சமாக இருந்த வரம்பு, தற்போது ரூ. 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தொடர்ச்சியாக எடுத்துவருகிறது. நேற்று சிறு, குறுந் தொழில் செய்வோரின் வரிச்சுமையை நீக்கும் வகையில், அவர்களுக்கான வரி வரம்பை ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 40 லட்சமாக உயர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது, பெருமளவிலான ஜிஎஸ்டி வருவாய், முறைப்படுத்தப்பட்ட துறை மற்றும் பெரிய நிறுவனங் களில் இருந்து கிடைக்கிறது.

எனவே சிறு, குறுந் தொழில் களுக்கான வரிச் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். சிறு, குறுந் தொழில் செய்வோரில் ரூ. 40 லட்சம் வரையிலான வருமானத்துக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தற்போது இவர்களுக்கான வரிவிலக்கு வரம்பு ரூ. 20 லட்சமாக உள்ளது. இது இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

சில வட கிழக்கு மாநிலங்களில் வரிவிலக்கு வரம்பு ரூ. 10 லட்சமாக உள்ளது. இது ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

இதை அனைத்து மாநிலங்களும் செயல்படுத்தும் பட்சத்தில் இதன் மூலம் அரசுக்கு வரிவருவாயில் ஆண்டுக்கு ரூ. 5,200 கோடி நஷ்டம் ஏற்படும் என்றார். மேலும், ரூ. 1 கோடி வரையில் வருமானம் ஈட்டும் உற்பத்தி துறையினருக்கு, காம்போசிஷன் திட்டத்தின் கீழ் ஒரு சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பும் ரூ. 1.5 கோடி யாக உயர்த்தப்பட்டுள்ளது. சேவைத்துறையினருக்கு 6 சதவீ தமாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் என்றார். 1.17 கோடி தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப் பட்டுள்ளன. அவற்றில் 18 லட்சம் நிறுவனங்கள் காம்போசிஷன் வரி திட்டத்தின் கீழ் உள்ளன. இதன் மூலம் அரசுக்கு ரூ. 3,000 கோடி இழப்பு ஏற்படும். ஆனால், இந்த நடவடிக்கைகள் மூலம் சிறு, குறு தொழில் துறையினர் பெரிதும் பலனடைவார்கள் என்று கூறினார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, “கேரளம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் ரு. 20 லட்சத்திலேயே வரம்பு தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளன. மாநிலங்கள் விருப்பப்பட்டால் இந்த வரம்பிலேயே தொடரலாம்” என்று கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close