[X] Close

ஆதார் மூலம் மிச்சமான பணத்தில் மூன்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தலாம்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்


aadhar-issue

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 10:10 am
  • அ+ அ-

ஆதார் திட்டத்தினால் மிச்சமான பணத்தை வைத்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைப் போல் மூன்று திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஆதார் அடையாள எண் மூலம், மார்ச் 2018 வரையில் மட்டுமே ரூ.90,000 கோடி மிச்சமாகி சேமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி யுள்ள நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இந்தப் பணத்தை வைத்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைப் போல் மூன்று திட்டங்களைச் செயல் படுத்த முடியும் என்று கூறியுள் ளார்.

இது குறித்து தனது வலைபக்கத் தில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 28 மாதங்களில் 122 கோடி ஆதார் எண்கள் வழங்கப் பட்டுள்ளன. மார்ச் 2018 வரையில் மட்டுமே ஆதார் மூலம் ரூ. 90,000 கோடி மிச்சமாகி சேமிக்கப் பட்டுள்ளதாகக் கூறினார். ஆதார் திட்டத்தின் உதவியால், ஆவணங்களில் போலி பதிவுகள், அரசு நலத் திட்டங்களில் போலி பயனாளர்கள், இறந்தவர்கள்/நிஜத் தில் இல்லாதவர்கள் உள்ளிட்டோ ரின் பதிவுகள் போன்றவை நீக்கப்பட்டுள்ளன.

உலக வங்கியின் டிஜிட்டல் டிவி டெண்ட் அறிக்கையிலும், ஆதார் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 70 ஆயிரம் கோடி இந்தியா வால் சேமிக்க முடியும் எனக் குறிப் பிட்டுள்ளது. ஆதார் திட்டத்தின் மூலம் சேமிக்கப்பட்ட தொகையை வைத்து ஆயுஷ்மான் பாரத் திட் டத்தைப் போல மூன்று திட்டங்களைச் செயல்படுத்தலாம்.

காங்கிரஸ் கொண்டுவந்த திட்டம்

ஆதார் திட்டம், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப் பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், அது சட்டபூர்வமானதாக இல்லை. அந்தத் திட்டத்தை நிர் வகிக்க எந்தவொரு சட்டமும் இல்லை. இந்த விஷயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையே பிளவுபட்டு கிடந்தது. நந்தன் நீலகேனி தீர்க்க மாக இருந்தார். ஆனால் மூத்த அமைச்சர் அதை தடுத்தார். அப் போதைய பிரதமரும் முடிவு எடுக்க முடியாதவராக இருந்தார். ஆதார் பதிவுகள் நடந்தாலும், மிகக் குறைவான அளவிலேயே இருந்தன.

மேலும், ஆதார் தகவல்கள் பாதுகாக்கப்படுவது குறித்து எந்த செயல்திட்டமும் செய்யப்படவில்லை. ஆதாரை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்ற விளக்கமும் இல்லை.

ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, முதலில் ஆதார் திட்டத்தை சட்ட ரீதியாகச் செயல்படுத்த தேவை யான திட்டங்கள் வகுக்கப்பட்டன. கொள்கை வரைவு இறுதி செய்யப் பட்ட பிறகு, பிரதமர் மோடி முக்கிய நிர்வாகிகளுடன் கலந்தா லோசித்தார். பின்னர் தீர்க்கமாக முடிவெடுத்து, திட்டமிட்டபடி ஆதார் சட்டத்தைச் செயல்படுத்த அனுமதி அளித்தார். ஆதார் தகவல்கள் பாதுகாக்கப்படுவதற்கான செயல்திட்டங்களும் சிறப் பாகத் திட்டமிடப்பட்டு செயல் படுத்தப்பட்டன.

மொத்தத்தில் ஆதார் திட்டத்தை முற்றிலுமாக மறு ஆய்வு செய்து அதை நடைமுறைக்கேற்ற வகையில் சட்டங்களை மாற்றி அமல்படுத்தப்பட்டது. இதன் மிக முக்கியமான நோக்கம், ஏழை மக்கள் நலனுக்காக அரசு ஒதுக்கீடு செய்யும் பெருமளவிலான தொகை சரியான பயனாளரைச் சென்றடைய வேண்டும் என்பதுதான்.

அரசின் மானியம் மற்றும் பிற சலுகைகள் யாருக்குச் சென்று சேர்கிறது என்று தெரியாதபோது வீணாகும் நிதி என்பது பெருமளவில் இருக்கிறது. ஆதார் மூலம் பயனாளர்களை எளிதில் அடையாளம் காண முடிவதால், பல ஆயிரம் கோடிகள் அரசுக்கு மிச்சமாகின்றன.

முழுமையாக திட்டமிட்டு செயல்படுத்திய பிறகும் இந்தச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் சவாலுக்கு ஆளானது. ஆனால் இறுதியில், ஆதார் சட்டத்தின் அடிப்படை தன்மையைக் காப்பாற் றும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தது.

தனிநபர் ரகசியத்தைப் பாது காக்கும் உரிமை மீறப்படுவதாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டையும் நிராகரித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆதார் சட்டத்தை மேலும் வலுப்படுத்தியது என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close