[X] Close

மியூச்சுவல் பண்டில் ரூ. 1.24 லட்சம் கோடி முதலீடு


mutual-funding

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 10:04 am
  • அ+ அ-

2018-ம் ஆண்டில் மியூச்சுவல் பண்டில் ரூ. 1.24 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஃபி வெளியிட்டுள்ள அறிக் கையின்படி, 2018-ம் ஆண்டில் மியூச்சுவல் பண்டில் ரூ. 1.24 லட்சம் கோடி முதலீடு குவிந்துள்ளது.

இதன் மூலம் மியூச்சுவல் பண்ட் துறை 5.54 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து ஆறாவது வருடமாக இதன் வளர்ச்சி ஏற்றத்தில் உள்ளது குறிப்பிடத் தக்கது.

டிசம்பர் 2018 நிலவரப்படி மியூச்சுவல் பண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 23.61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், ரூபாய் மதிப்பு சரிவு, ஐஎல் அண்ட் எப் எஸ் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்குச் சந்தை பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளானது. ஆனாலும், முதலீட் டாளர்களிடையே தொடர்ச்சியாக முதலீடு செய்யும் போக்கும் இருந்துள்ளது.

அதுவும் மாதாந்திர எஸ்ஐபி முதலீடு மூலம் செய்யப்படும் முதலீடு அதிகமாக உள்ளது. மேலும் சிறு முதலீட்டாளர்களின் முதலீடும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தப் போக்குதான் மியூச்சுவல் பண்ட் துறையில் முதலீடு தொடர்ந்து வளர்ச்சி அடைந்துவர காரணம் என ஆம்ஃபி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், 2017-ல் செய்யப் பட்டுள்ள முதலீட்டைக் காட்டிலும், 2018-ல் செய்யப்பட்டுள்ள முத லீடு குறைந்துள்ளது. 2017-ல் ரூ. 5.4 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close