[X] Close

வங்கிகள் இணைப்பால் வேலை இழப்பு ஏற்படாது: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்


banks-connection-does-not-cause-job-loss

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி : கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 05 Jan, 2019 11:42 am
  • அ+ அ-

பொதுத் துறை வங்கிகளை இணைப்பதால் யாரும் வேலை இழக்கமாட்டார்கள் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மக்களைவையில் நேற்று தெரிவித்தார்.

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகிய மூன்று பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த வாரத் தொடக்கத்தில் மத்திய அமைச்சரவையும் இந்த மூன்று வங்கிகளின் இணைப்புக்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் பொதுத் துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கைகளால் வேலை இழப்பு ஏற்படும் என்று வங்கி ஊழியர்கள் சங்கங்களிலிருந்தும், எதிர்கட்சிகளிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து மக்களவையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் அருண் ஜேட்லி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்த மூன்று வங்கிகள் இணைக்கப்படுவதால் எந்தவிதமான வேலை இழப்பும் இருக்காது. இந்த இணைப்பு நடவடிக்கையின் மூலம் பாரத ஸ்டேட் வங்கி போன்ற இன்னொரு பெரிய வங்கி உருவாகும். மேலும் கடன் வழங்கும் செலவும் குறையும். வங்கித் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. 21 பொதுத் துறை வங்கிகளில் அதிக வாராக்கடன் உள்ள 11 வங்கிகள் உடனடி சீர்திருத்த நடவடிக்கையின் கீழ் உள்ளன. இனிவரும் காலங்களில் வாராக்கடன் வளர்ச்சியானது குறைந்துகொண்டே வரும். திவால் சட்ட நடைமுறைகளின் மூலம் ரூ. 3 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களுக்குத் தீர்வுகள் எட்டப்பட்டு வருகின்றன. நடப்பு நிதி ஆண்டில் டிசம்பர் 31 வரை பொதுத் துறை வங்கிகளில் ரூ. 51,533 கோடி மறுமூலதனம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

முறைகேடு நடக்கவில்லைஅவரிடம் பிஎன்பி வங்கியில் பென்சன் பண்ட், கிராஜுவிட்டி பண்ட் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது என்று பாஜக எம்பி கிரித் சோமையா கேள்வி எழுப்பினார். அதற்கும் பதிலளித்தார் அருண் ஜேட்லி. பிஎன்பி வங்கியின் டிரஸ்ட் பண்டுகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்சன் பண்ட் மற்றும் கிராஜுவிட்டி பண்ட் இரண்டும் தனித்தனி நிர்வாகம். வங்கிக்கு இந்த டிரஸ்ட் பண்டுகளை எடுக்கவோ, கையாளவோ எந்த அதிகாரமும் இல்லை. இந்தக் கணக்குகளிலிருந்து வங்கி நிர்வாகம் எந்தப் பணத்தையும் எடுக்கவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. வங்கியின் கணக்குகள் அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட ஆடிட்டர்களால் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. அதன் அறிக்கையை வங்கியின் ஆடிட் கமிட்டி குழுவும் அங்கீகரித்திருக்கிறது என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close