[X] Close

ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பு பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது: நிதியமைச்சக அதிகாரி தகவல்


rbi-rs-2000-notes-reduced-to-minimum

  • முத்துக்குமார்
  • Posted: 03 Jan, 2019 21:16 pm
  • அ+ அ-

2016-ம் ஆண்டு நவம்பரில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு அச்சடிக்கத் தொடங்கப்பட்ட ரூ.2,000 நோட்டுகளின் அச்சடிப்பு எண்ணிக்கையை மத்திய ரிசர்வ் வங்கி தற்போது குறைந்தப் பட்சமாகக் குறைத்துள்ளது.

ரூ.500/1000 நோட்டுகளைத் தடை செய்த பிறகு கடும் பணப்பற்றாக்குறை ஏற்பட ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழகத்துக்கு வந்தன. மீள் பணமதிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தும் முடிவுடன் புதிய ரூ.500 நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு புழகத்துக்கு விடப்பட்டன. 

இந்நிலையில் நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, மத்திய ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் அவ்வப்போது புழக்கத்தில் இருக்கும் பணத்துக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ முடிவெடுக்கும் என்றார்.

ரூ.2000 நோட்டுகள் அறிமுகமான போதே, இதன் உபயோகம் போகப்போக குறைக்கப்படும் என்று ஆர்பிஐ தெரிவித்திருந்தது. ஏனெனில் பழைய ரூ.500, 1000 நோட்டுகள் தடைசெய்யப்பட்ட பிறகு பணப்புழகத்திற்காக தயாரிக்கப்பட்டதே இந்த ரூ.2000 நோட்டுகள்.

“ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.2,000 நோட்டுகளைக் குறைந்த அளவில் வைத்திருக்கவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிதல்ல” என்று அதிகாரி தெரிவித்தார்.

மார்ச் 2017 முடிவில் ஆர்பிஐ தகவல்களின் படி 3,285 மில்லியன் என்ற எண்ணிக்கையில் ரூ.2000 தாள்கள் புழகத்தில் இருந்தன.  மார்ச் 31, 2018-ல் இது 3,363 மில்லியன் தாள்களாக லேசாக அதிகரித்தது.  

இந்நிலையில் மார்ச் 2018 முடிவில் மொத்தமாக புழக்கத்தில் இருந்த பணமதிப்பு ரூ.18, 037 பில்லியன்களாகும். இதில் ரூ.2000 நோட்டுகள் 37.3% ஆகும். இது 2017-ல் இருந்த 50.2% என்பதிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது. 

என்று நிதியமைச்சக அதிகாரி தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close