[X] Close

ரூ. 70 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வசூலாகும்: அருண் ஜேட்லி நம்பிக்கை


recover-bad-loans-worth-rs-70-000-crore-by-march-end

  • நெல்லை ஜெனா
  • Posted: 03 Jan, 2019 16:28 pm
  • அ+ அ-

புதுடெல்லி

இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பொதுத்துறை வங்கிகள் வாரக்கடனில் 70 ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்து விடும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் ‘‘நாடுமுழுவதும் பொதுத்துறை வங்கிகளுக்கு வாரக்கடன் பெரும் சுமையாக உள்ளது. இந்த கடனை வசூலிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடன் பெற்று திருப்பித்தராதவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியால் இதுவரை 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேலும் 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசூலிக்கப்பட்டு விடும். கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது இதுவரை 66 வழக்குகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்த தொகை விரைவில் வசூலாகும்’’ எனக் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close