[X] Close

சிறு, குறு தொழில்களுக்கு சலுகை: அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரி குறைகிறது - ஜனவரி 10-ம் தேதி நடக்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு


gst-issue

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 07:44 am
  • அ+ அ-

இம்மாதம் 10-ம் தேதி நடை பெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க வரிச் சலுகை அளிக்க முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. அதேபோல அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கான வரியும் குறைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிசம்பர் 22-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு தொழில்களுக்கான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி ஜனவரி 10-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் இது முடிவு செய்யப்படும் என்று அதிகாரி கள் தெரிவித்தனர். தற்போது ஆண்டு வருமானம் ரூ. 20 லட்சம் வரை உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த வரம்பு ரூ. 75 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல அடுக்குமாடிக் குடி யிருப்புகளுக்கு 12 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி-யை 5 சதவீதமாகக் குறைப்பது குறித்தும் முடிவு செய் யப்படும்.

ஜனவரி 10-ம் தேதி நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 32-வது கூட்டமாகும். இதில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப் படும் என்று கூறப்படுகிறது. இதில் குறிப்பாக சிறு விநியோகஸ்தர்கள் மீது விதிக்கப்படும் கூட்டு வரி விதிப்பு குறித்தும், பேரழிவு செஸ் மற்றும் லாட்டரி மீதான ஜிஎஸ்டி விகிதத் தையும் முடிவு செய்வார்கள் என்று தெரிகிறது.

கட்டுமானத்தில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடு களுக்கு 5 சதவீதமும் விதிக்கப்படும் என்று தெரிகிறது. தற்போது புதி தாகக் கட்டப்பட்டு வரும் குடியிருப் புகள் மீது 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. வீடு கட்டி முடிக் கப்பட்டதற்கான சான்று அளிக்கப் படாவிட்டாலும் இந்த வரி விதிக்கப் படும். தற்போது கட்டி முடிக்கப் பட்டதற்கான சான்று பெறாத வீடு கள் விற்பனை செய்யப்பட்டால் அதற்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப் படுவதில்லை.

பொதுவாக வீடுகளைக் கட்டும் கட்டுமான நிறுவனங்கள் உள்ளீட்டு வரி வரவு மூலம் 12 சதவீத வரியில் பெருமளவு தொகையை திரும்பப் பெறுகின்றன. ஆனால் இந்த வரி சலுகையை வாடிக்கையாளர் களுக்கு அளிப்பதில்லை. இதனால் வரி விகிதத்தை 5 சதவீதமாகக் குறைத்து அதை அனைத்து வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளும் செலுத்துமாறு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 80 சதவீத அளவுக்கு ஜிஎஸ்டிஐ திரும்பப் பெறும் கட்டுமான நிறுவனங்கள் 5 சதவீத வரியை செலுத்த வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட உள்ளது.

மூன்று வார இடைவெளியில் ஜிஎஸ்டி கூட்டம் நடத்தப்பட்டு, சிறு, குறு தொழில் துறையினருக்கு வரி விலக்கு அளிக்க முடிவு செய்திருப் பதன் மூலம், அரசு எந்த அளவுக்கு தொழில்துறை மீது அக்கறை செலுத்துகிறது என்பது புலனாவதாக இஒய் டாக்ஸ் நிறுவன பங்குதாரர் அபிஷேக் ஜெயின் தெரிவித்துள்ளார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close