[X] Close

விரைவாக வளரும் பொருளாதார நாடு; சீனாவை விட மிக வேகமாக வளரும் இந்தியா: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தகவல்


the-fastest-growing-economic-country-india-is-much-faster-than-china

ராஜீவ் குமார்

  • kamadenu
  • Posted: 02 Jan, 2019 10:15 am
  • அ+ அ-

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்ற, இறக்கங்கள் இருந்த போதிலும் சர்வதேச அள வில் விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்டும் நாடுகளில் தொடர்ந்து இந்தியா முன்னிலை வகிக்கிறது.

சீனாவை விட இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி விரைவாக உள்ளதாக நிதி ஆயோக் அமைப் பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் கச்சா எண் ணெய் விலையில் காணப்படும் ஸ்திரமற்ற நிலை, நாடுகளிடையி லான வர்த்தகப் போர் ஆகிய சூழல் நிலவியபோதிலும் 2018-ம் ஆண்டில் இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்டிய தாக அவர் குறிப்பிட்டார். 2018-19-ம் நிதி ஆண்டில் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது.

பின்னர் செப்டம்பர் காலாண்டில் 7.1 சதவீதமாக சரிந்தது.

2019-ம் ஆண்டில் சீர்திருத்தங் கள் மேற்கொள்ளப்பட்டு வளர்ச்சி முடுக்கி விடப்படும் என்று ராஜீவ் குமார் கூறினார்.

இந்த ஆண்டு மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய அரசு தாராளமாக செலவு களை மேற்கொள்ளும், ஆனால் அது நிதிப் பற்றாக்குறை அதிகரிக்க வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்தது, மற்றும் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர், அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதம் உயர்த்தியது போன்ற காரணிகள் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்திய வங்கித் துறையில் நிகழ்ந்த பெரும் மோசடி, குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி, மெகுல் சோக்கி செய்த ரூ. 11,400 கோடி மோசடி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது அரசியல் ரீதியாக பெருமளவில் விவாதிக்கப்பட்டதால், இவ்விரு வரையும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியதாயிற்று.

அனைத்துக்கும் மேலாக ஆண்டு இறுதியில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜிநாமா செய்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நிதி ஆதாரம் போதுமான அளவுக்கு இல்லாத பொதுத்துறை வங்கிகள் மீதான விதிமுறைகளை தளர்த்த அரசு ரிசர்வ்வங்கிக்கு நெருக்குதல் அளித்தது மற்றும் ஆர்பிஐ சட்டப் பிரிவு 7-ஐ பிரயோகப்படுத்துவது குறித்த சர்ச்சை ஆகியன ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாடுகளைக் கேள்விக்குறியாக்கியது.

அனைத்துக்கும் மேலாக இன்பிராஸ்டிரக்சர் நிறுவனமான ஐஎல் அண்ட் எப்எஸ் நிதி நிலை மோசமடைந்து திவால் நிலைக்கு சென்றது பெரும் பிரச்சினையாக அமைந்தது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்த பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகள், பரஸ்பர நிதி அமைப்புகள் ஆகியவற்றின் கடன் தொகை திரும்புமா என்ற அச்சம் எழுந்தது.

இந்தியாவின் லேமென் சகோ தரர்கள் என ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனம் வர்ணிக்கப்பட்டது. இதன் காரணமாக வங்கியல்லாத தனியார் நிதி நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி தர ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நெருக்குதல் அளித்தது.

இருப்பினும் அரசு கொண்டு வந்த திவால் மசோதா சட்டம் வங்கி களின் வாராக் கடனை திரும்பப் பெறுவதற்கு காரணமாக அமைந் தது. சர்வதேச அளவில் தொழில்புரி வதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 77வது இடத்துக்கு முன் னேறியது.

அனைத்துக்கும் மேலாக பண வீக்கம் ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட குறைவாகவே இருந்தது. மேலும் தொழில்துறை உற்பத்தி 5.6 சதவீதமாக அதிகரித்ததும் முக்கியமான காரணியாகும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close