[X] Close

முதன் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வீட்டு கடனுக்கான மானியம் நீடிப்பு


subsidy-for-home-loans-for-home-buyers-for-the-first-time

  • kamadenu
  • Posted: 02 Jan, 2019 10:08 am
  • அ+ அ-

முதன் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுக்கடன் வட்டி மானியம் வழங்கும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வருமானம் கொண்ட நகரங்களில் வசிக்கும் மத்திய தர வர்த்கத்தினர் முதன் முறையாக வீடு வாங்கும் போது மத்திய அரசு ரூ.2.5 லட்சம் வட்டி மானியம் வழங்கி வருகிறது. இந்த மானிய திட்டத்தை வரும் 2020-ம் ஆண்டு மார்ச் வரை நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து மத்திய வீட்டு வசதித்துறை இணையமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கூறுகையில், மத்திய தர வர்த்கத்திற்கான இந்த மானிய திட்டம் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் இறுதியில் இத்திட்டத்தின் மூலம் 1 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் 93 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர். மேலும், ரூ.1,960 கோடி மானியத்தொகை வங்கிகளின் வாயிலாக விநியோகிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இத்திட்டம் இரண்டு வழிமுறைகளில் மத்திய தர வர்த்தகத்தினர்களுக்காக பிரதமர் மோடியால் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் இத்திட்டம் 2019-ம் ஆண்டு மார்ச் வரையில் நீடிக்கப்பட்டது. இத்திட்டம் புதியதாக வீடு கட்ட அல்லது வீடு வாங்க விரும்பும் மத்திய தர வர்த்கத்தினர் பயன் பெறுவதற்காக கொண்டு வரப்பட்டது. மேலும், இத்திட்டம் மத்திய தர வர்த்தகத்தினரை இலக்காக கொண்டு வீடு கட்டும் கட்டுமான நிறுவனங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மத்திய அரசின் கொள்கை மிகவும் தெளிவாக அமைந்திருப்பதால் இத்திட்டத்தின் மூலம் அதிகம் பேர் பயன் அடைகின்றனர் என்று பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் நகர்ப்புற இணைச் செயலாளர் அம்ரித் அபிஜத் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close