[X] Close

விமான எரிபொருள் விலை 14.7 சதவீதம் குறைப்பு


air-fuel-price-cut-14-7-percent

  • kamadenu
  • Posted: 02 Jan, 2019 10:02 am
  • அ+ அ-

சர்வதேச சந்தையில் விலை குறைந்ததை தொடர்ந்து விமான எரிபொருள் (ஏடிஎப்) விலை 14.7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

விமான பெட்ரோல் விலை ஒரு கிலோ லிட்டர் 14.7 சதவீதம் அதா வது ரூ.9,990 குறைக்கப்பட்டு ரூ.58,060.97 ஆக குறைந்துள்ளது. இரண்டாவது முறையாக விமான பெட்ரோல் விலை அதிகளவில் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி பெட்ரோல் விலை ரூ.8,327.83 குறைக்கப்பட் டது. இந்த விலை குறைப்பு நட வடிக்கை விமான நிறுவனங் களுக்கு மிகவும் உதவியாக இருக் கும் என கூறப்படுகிறது. தற்போது விமான பெட்ரோல் விலை வாகனங் களில் பயன்படுத்தப்படும் பெட் ரோல் விலையை விட குறைந் துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தி லிருந்து வாகனங்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதுவரையில் பெட் ரோல் விலை லி்ட்டருக்கு ரூ.14.18, டீசல் விலை ரூ.13.03 குறைக்கப் பட்டுள்ளது. பெட்ரோல் விற்பனை நிறுவனங்கள் மாதந்தோறும் விமான பெட்ரோல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

வாக்களிக்கலாம் வாங்க

’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close