[X] Close

டிவி உள்ளிட்ட 23 பொருள்களின் விலை குறைகிறது


tv-rate-down

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 02 Jan, 2019 07:50 am
  • அ+ அ-

டி.வி. சினிமா டிக்கெட் உள்பட 23 பொருள்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் இப்பொருள்கள் விலை முன்பை விட குறைகிறது.

கடந்த டிசம்பர் 22-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 23 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது.

ஜிஎஸ்டி வசூல் ரூ. 94,726 கோடி

இந்த வரி குறைப்பு நடவடிக்கை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 94,726 கோடியாக இருந் தது. முந்தைய மாதத்தைக் காட் டிலும் இது குறைவாகும். நவம் பரில் ரூ. 97,637 கோடி வசூலாகி யிருந்தது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 30-ம் தேதி வரை ஜிஎஸ் டிஆர்-3பி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 72.44 லட்சமாகும்.

ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்துக் காக மாநிலங்களுக்கு வழங்கப் பட்ட இழப்பீட்டு தொகை ரூ. 11,922 கோடி என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close