[X] Close

மார்ச் மாதத்தில் மட்டும் பிஎஸ்என்எல்-ல் இணைந்த 10 லட்சம் வாடிக்கையாளர்கள் 


bsnl-customers-10-lakshs

கோப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 31 Mar, 2018 12:47 pm
  • அ+ அ-

ஏர்செல் சேவை முடங்கியதன் எதிரொலியாக, பிஎஸ்என்எல் தமி்ழ்நாடு சர்க்கிள் நிறுவனத்தில் நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும் 10 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர்.

கடன் பிரச்சினை, டவர் நிறுவனங்களுக்கு பணம் அளிக்காதது உள்ளிட்ட காரணங்களால் ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் சேவை பாதிப்படைந்தது. இதன் காரணமாக, ஏர்செல் நிறுவனத்தின் சுமார் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்கள் பிற செல்போன் நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். 

இவ்வாறு மாறும் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய செல்போன் நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். இதில், அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மட்டும் நடப்பு மார்ச் மாதத்தில் 10 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து, பிஎஸ்என்எல் தமிழ்நாடு சர்க்கிள் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏர்செல் நிறுவனத்தின் சேவை முடங்கியதால், அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வந்து இணைந்துள்ளனர். இதைத் தவிர பிற செல்போன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் எங்கள் நிறுவனத்தின் சேவையில் வந்து இணைந்துள்ளனர். நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும் 10 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் எங்கள் நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.

மேலும், மற்ற நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனம், வாய்ஸ்கால் மற்றும் டேட்டா சேவைகளை குறைந்த கட்டணத்தில் அதிகளவு வழங்குகின்றன. இதுவும் புதிய வாடிக்கையாளர்கள் வந்து சேருவதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு ஏற்ப டவர்களின் எண்ணிக்கையும் விரைவில் அதிகரிக்கப்படும் என்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close