[X] Close

பிரதான தொழில்துறையில் 3.5 சதவீதம் வளர்ச்சி


3-5-growth-in-main-industry

  • kamadenu
  • Posted: 01 Jan, 2019 11:01 am
  • அ+ அ-

தொழில்துறையில் 8 முக்கிய தொழில்களின் வளர்ச்சி நவம்பர் மாதத்தில் 3.5 சதவீதமாக உள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் உரங் களின் விலை சற்று குறைந்ததால் வளர்ச்சி எட்டப்பட்டதாக மத்திய அரசு அறிக்கை தெரிவிக்கிறது.

2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மிகவும் குறைந்த அளவாக 2.7 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டது. அதிலிருந்து கடந்த 16 மாத காலத்தில் மிக மெதுவான வளர்ச்சி எட்டப்பட்டு தற்போது 3.5 சதவீதத்தை எட்டியுள்ளது.

பிரதான தொழில்கள் பட்டியலில் நிலக்கரி, கச்சா எண் ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட துறைகள் உள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்துறைகளின் வளர்ச்சி 6.9 சதவீதமாக இருந்தது.

இந்த எட்டு தொழில்துறைகளின் மெதுவான வளர்ச்சி ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி வளர்ச் சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். தொழில்துறை உற்பத்தியில் இவற்றின் பங்களிப்பு 41 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close