[X] Close

கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களிடமிருந்து ரூ. 40 ஆயிரம் கோடி வாராக்கடன் மீட்பு: ரிசர்வ் வங்கி அறிக்கையில் தகவல்


rs-40-000-crores-with-warranty-information-on-rbi

ரிசர்வ் வங்கி: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 31 Dec, 2018 12:08 pm
  • அ+ அ-

2018 மார்ச் வரையிலான நிதி ஆண்டில் இந்திய வங்கிகள் ரூ. 40,400 கோடி வாராக்கடனை மீட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் அதிகம்.

இந்திய வங்கிகளுக்கு வாராக் கடன் என்பது பெரும் நெருக்கடி யாக இருந்து வருகிறது. வங்கி களுக்கு சுமார் ரூ. 10 லட்சம் கோடிக் கும் மேல் வாராக்கடன் உள்ளது. வங்கிகள் வாராக்கடன்களை மீட்க பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன.

திவால் சட்டம் மற்றும் சர்பாசி சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத் தங்கள், கடன் மீட்பு தீர்ப்பாயம், அமலாக்கத்துறை மற்றும் லோக் அதாலத் ஆகியவற்றின் உதவியால் வங்கிகள் வாராக்கடன்களை மீட்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஒவ்வொரு நிதி ஆண்டும் வங்கிகள் மீட்டுள்ள வாராக்கடன் விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. தற்போது ‘2017-18-ல் வங்கித்துறையின் போக்கும் வளர்ச்சியும்’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், கடந்த மார்ச் மாதம் வரையிலான 2017-18 நிதி ஆண்டில் வங்கிகள் மீட்டுள்ள வாராக்கடன் ரூ. 40,400 கோடியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இதில் ரூ. 4,900 கோடி திவால் சட்டம் மூலமாகவும், ரூ. 26,500 கோடி சர்பாசி சட்டத்தின் மூலமாகவும் மீட்கப் பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறியுள்ளது.

இதற்கு முந்தைய 2016-17 நிதி ஆண்டில் ரூ. 38,500 கோடி மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது. வாராக்கடன் மீட்பு நடவடிக் கையில் தொடர்ந்து முன்னேற்றம் இருந்துவருவதாகத் தெரிகிறது.

மேலும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில், வங்கிகளின் தீவிர முயற்சிகள் ஒருபக்கம் இருந் தாலும், சர்பாசி சட்டத்தில், கடன் வாங்கியவர்கள் தங்களுடைய சொத்து விவரங்களை வழங்காவிட் டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற திருத்தத்தைக் கொண்டுவந்தது, வாராக்கடன் மீட்பு அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளது.

திவால் சட்ட நடைமுறைகளைச் செயல்படுத்துவதற்கான உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தி னால், கடன் மீட்பு மேலும் வளர்ச்சி யடையும் என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தின் அமர்வு நீதி மன்றங்களை அதிகரிப்பது போன்ற வற்றை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் திவால் வழக்கு களுக்குத் தீர்வு காணும் நேரம் குறையும் என்று தெரிவித்துள்ளது.

கடன் மீட்பு நடவடிக்கைகளில் ஒருபக்கம் வங்கிகள் செயல்பட்டு வந்தாலும், மறுபக்கம் குழப்பமான மற்றும் நஷ்டமுள்ள கடன் சொத்துக் களை, சொத்துகள் மறு கட்டமைப்பு நிறுவனங்களுக்கும், பிற வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் விற்பனை செய்யும் நடவடிக்கை களையும் எடுத்து வருகிறது. இதன் மூலம் வங்கிகள் தங்களின் நிதிநிலை அறிக்கையைச் சுத்தம் செய்துவருகின்றன.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close