[X] Close

வாராக்கடன்களால் வங்கிகளின் லாபம் பாதிப்பு: இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையில் தகவல்


reserve-bank

  • kamadenu
  • Posted: 30 Dec, 2018 10:53 am
  • அ+ அ-

வாராக்கடன்கள் வங்கியின் லாப விகிதத்தை மிகவும் பாதித்தது என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த 2018-ம் ஆண்டில் வாராக் கடன்கள் வங்கிகளின் நிதி நிலை மதிப்பீட்டை மிகவும் குறைத்துவிட்டன. இது வங்கிகளின் லாப விகிதத்தை மிகவும் பாதித்தது. குறிப்பாக ஸ்டேட் வங்கிகளின் லாப விகிதத்தை மிகவும் பாதித்துள்ளது.

ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் ஐஎல் & எப்எஸ் நிறுவனங்களில் கடன் தொகை உரிய முறையில் வசூலிக்கப்படாமல் இருப்பதால் வங்கி சாராத நிதி நிறுவனங்களின் நிதி நிலைமை கவலை அளிப்பதாக இருக்கிறது. அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வங்கிகளின் வாராக்கடன்கள் நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு வங்கிகளின் வாராக்கடன்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு திவால் மசோதா சட்டம் (ஐபிசி) கொண்டு வரப்பட்டது.

மொத்தமுள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் 11 வங்கிகளில் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு காரணமாக ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளன. அலாகாபாத் வங்கி, யுனைடெட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஐடிபிஐ வங்கி, யூகோ வங்கி, பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், தேனா வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகிய வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் உள்ளன. இந்த வங்கிகள் கடன்கள் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

மேலும், வழங்கிய கடன்களை வசூல் செய்வதிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றன. கடன் வழங்குதல் மற்றும் டெபாசிட் திரட்டுவதில் காணப்படும் சிறப்பான வளர்ச்சி வங்கிகளின் வாராக்கடன் மீதான அபாயத்தை குறைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close