தவறுகளை சரி செய்ய சில ஆண்டுகள் தேவை: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தகவல்

ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் தற்போதுள்ள தவறுகளைச் சரி செய்ய சில ஆண்டுகள் ஆகலாம் என அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.
கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா வுடன் இணைந்து முறைகேடாகப் பயனாளர்களின் தகவல்களைப் பயன்படுத்தியதற்காகக் கடுமை யாக விமர்சிக்கப்பட்டார் ஃபேஸ் புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க். அவரும் நிறுவனத்தின் தவறுக் கும் தன்னுடைய தவறுக்கும் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இதன் தொடர்ச்சியாக தகவல் திருட்டு, தனிநபர் அந்தரங்கப் பாது காப்பு போன்றவை கேள்விக்குறி யாக இருப்பது பெரும் விவா தத்தைக் கிளப்பியது.
இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் சேவைகளில் தற்போதுள்ள பிரச்சினைகளைச் சரி செய்யும் முயற்சிகளில் தீவிர மாக இருப்பதாகக் கூறியுள்ளார் மார்க் ஜூகர்பெர்க். இது குறித்து தனது ஃபேஸ்புக் பதிவில் அவர் மேலும் கூறியதாவது,
எங்களுடைய சேவைகள் அனைத்திலும் ஆபத்துகள் ஏற்படு வதைக் காப்பதில் முழு கவனம் செலுத்தும் வகையில் நிறுவனத் தின் அடிப்படை டிஎன்ஏ-வை மாற்றி யிருக்கிறோம். தற்போதுள்ள பிரச்சினைகளை சரிசெய்ய சில ஆண்டுகள் ஆகலாம் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்கிறேன். அவற்றில் தேர்தலில் தலையீடு செய்தல் அல்லது ஆபத்தான பேச்சு கள் உள்ளிட்ட பிரச்சினைகளை ஒருபோதும் முழுமையாகச் சரி செய்துவிட முடியாது என்றார்.