[X] Close

இ-காமர்ஸ் நிறுவனங்களின் விற்பனைக்கு கட்டுப்பாடு


e-commerce-websites

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 07:24 am
  • அ+ அ-

ஆன்லைன் வர்த்தக நிறுவனங் களின் விதிமுறைகளில் கடுமை யான கட்டுப்பாடுகளைக் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் அவை பங்கு வைத்துள்ள நிறுவனங்களின் பொருள்களை விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 முதல் இது அமலுக்கு வர உள்ளது.

இ-காமர்ஸ் நிறுவனங்கள் அள்ளி வழங்கும் ஆஃபர் களால் உள்நாட்டு வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாகத் தொடர்ச்சி யாகப் புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால், வர்த்தக அமைச் சகம் இந்த நடவடிக்கையை எடுத் துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து வர்த்தக அமைச் சகம் தெரிவித்துள்ளதாவது, இ-காமர்ஸ் துறையில் உள்ள நிறுவனங்கள் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களின் பொருள் களையோ, அல்லது அதன் குழும நிறுவனங்களின் பொருள் களையோ விற்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இ-காமர்ஸ் நிறுவனங் கள் கொடுக்கும் கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகளில் நேர்மை யாக இருக்க வேண்டும். எந்தவித பாகுபாடுகள், முறைகேடுகளிலும் ஈடுபடக்கூடாது என்று கூறியுள் ளது.

இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்க ளின் சட்டபூர்வமான ஆடிட்டர் அங்கீகரித்த முந்தைய நிதி ஆண் டின் அறிக்கையை ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 30-ம் தேதி ரிசர்வ் வங்கியிடம் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் பிப்ரவரி 1 முதல் அம லுக்கு வருவதாகவும் கூறியுள்ளது.

இ-காமர்ஸ் நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இன்வென்ட்ரி தொடர்பான நட வடிக்கைகளில் அதற்கு அனுமதி யில்லை என்பது குறிப்பிடத்தக் கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close