[X] Close

இருசக்கர வாகன விற்பனை 8-10% வளர்ச்சி அடையும்: இக்ரா அமைப்பு தகவல்


two-wheeleers-sales

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 07:22 am
  • அ+ அ-

வரும் 2019-ம் ஆண்டில் இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனை 8-10% வளர்ச்சி அடையும் என இக்ரா அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தனிநபர் வரு மானம் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த மூன்று நிதியாண்டுகளாக பருவ மழை சராசரி அளவை ஒட் டியே இருக்கிறது. விளை பொருட் களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை அதிகரித்துள்ளதும், குறிப் பிட்ட சில மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள் ளது போன்ற காரணங்களால் வரும் 2019-ம் ஆண்டு இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனை 8-10 சதவீத வளர்ச்சி காணும் என்று இக்ரா அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், இத்துறையின் வளர்ச்சி நிலையாகவே இருக்கிறது என்று கூறியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை யிலான காலத்தில் இரு சக்கர வாகனங்கள் துறையின் வளர்ச்சி விகிதம் 11.1 சதவீதமாக இருந்தது.

அதேசமயம் இருசக்கர வாக னங்களுக்கான இன்ஷூரன்ஸ் பிரீமியம் அதிகரித்துள்ளது, கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டது, லைசென்ஸ் வைத்திருப் பவர்களுக்கு மட்டுமே இரு சக்கர வாகனங்கள் விற்க வேண்டும் என்ற மேற்கு வங்க மாநில அரசு உத்தரவு போன்றவை இத்துறையில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதன் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close