[X] Close

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தன்மை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது: யஷ்வந்த் சின்கா கருத்து


reserve-bank

  • kamadenu
  • Posted: 23 Dec, 2018 09:55 am
  • அ+ அ-

புதுடெல்லி

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தன்மை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பாஜக-விலிருந்து விலகிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா, பிரதமர் மோடி தலைமையிலான அரசை ஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கம் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் அவர் ‘இந்தியா அன் மேட்’  என்ற புதிய புத்தகத்தை நேற்று வெளியிட்டார். அதில் பிரதமர் மோடி இந்திய பொருளாதாரத்தை எப்படி மோசமான நிலைக்கு கொண்டு சென்றார் என்பது குறித்து  விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: முன்னாள் ஐக்கிய முன்னணி அரசு கையாண்ட கொள்கைகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்து இந்திய பொருளாதாரத்தை மிக உயர்ந்த நிலைக்கு பிரதமர் மோடி கொண்டு சென்றிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. பிரதமர் மோடி ஏழை நாட்டை நடுத்தர வருவாய் கொண்டுள்ள நாடாக மாற்றியிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை அவர்  பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டார்.

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தன்மை மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை மிகப்பெரிய வங்கி மோசடி. அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மோடி அரசின் `மேக் இன் இந்தியா' ஒரு தோல்வி அடைந்துள்ள திட்டமாகத்தான் இருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் (ஜிடிபி) இந்தியாவின் உண்மையான திறனை காட்டிலும் குறைவாகவே இருக்கிறது. சுய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மிக முக்கியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால், இது 
உண்மையான வேலைவாய்ப்பின்மையால் ஏற்பட்டுள்ள சிக்கலை திசை திருப்புவதாகத்தான் இருக்கிறது. ஜிஎஸ்டி மிகச்சிறந்த திட்டம். இது மிகவும் எளிமையாக இருந்திருந்தால் மிகச்சிறந்த வரி விதிப்பு முறையாக இருந்திருக்கும். ஆனால் பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் தொடக்கத்தில் இருந்தே இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. இதுவரையில் 200 முறை ஜிஎஸ்டியில் மாற்றம்  கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக 400 அறிவிப்புகள் 100 சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close