2022- ல் 5-ஜி தொழில்நுட்பம்: டிராய் செயலர் தகவல்

இந்தியாவில் 2022-ம் ஆண்டி லிருந்து 5 ஜி (ஐந்தாம் தலை முறை) தொழில்நுட்பம் தொலைத் தொடர்புத் துறையில் பின்பற்றப் படும் என்று தொலைத் தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையத் தின் (டிராய்) செயலர் எஸ்.கே. குப்தா தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா அனாலிடிக்ஸ் உள்ளிட்ட பயன்பாட்டுக்கு 5 ஜி நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஊடகத்துறையில் மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்துவருகிறது. புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்தும்போதுதான் வளர்ச்சி சாத்தியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2022-ம் ஆண்டில் 5-ஜி நுட்பத் தைக் கொண்டு வரும் இலக்கில் தொலைத் தொடர்புத்துறை முன் னேறிக் கொண்டிருக்கிறது. அப் போது டிஜிட்டல் தளம் மிகவும் முன்னேறியதாக இருக்கும் என்றார். இந்தியாவில் தற்போது 40 கோடி மக்களுக்கு தரமான இணையதள சேவை கிடைக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இதில் ஊடகத் துறையினரின் தகவல் உபயோகம் மிக அதிக அளவில் உள்ளது என்று சுட்டிக் காட்டினார்.
ஸ்மார்ட்போன் உபயோகம் அதி கரித்த பிறகு ஊடகத்துறை அதிலும் குறிப்பாக ஸ்மார்ட்போனுக் கேற்ப செய்திகளை அளிக்கும் போக்கு அதிகரித்துள்ளதாக அவர் மேலும் கூறினார். இதனால் அவர் களது உபயோகமும் அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.