[X] Close
 

எல்இடி டிவி வாங்க போறீங்களா? - உங்களுக்கு நல்ல செய்தி


lcd-led-tv-panels

  • நெல்லை ஜனா
  • Posted: 24 Mar, 2018 17:32 pm
  • அ+ அ-

எல்சிடி மற்றும் எல்இடி டிவிக்களில் பயன்படுத்தப்படும் ‘ஓபன் செல்’களுக்கான வரியை 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளதால் அதன் விலை குறையும் என எதிர்பார்க்ப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்தியையும், வேலைவாய்ப்பையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்இடி, எல்சிடி டிவி பேனல்கள், உதிரிபாகங்களின் சுங்க வரி இரு மடங்காக பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே 7.5 சதவீதம் இருந்த சங்கவரி 5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்சிடி, எல்இடி, ஓஎல்இடி டிவிக்களின் பாகங்கள் விலை உயர்ந்தது. மேலும், இறக்குமதி செய்யப்படும் மொபைல் போனுக்கு சுங்க வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இந்த வரி உயர்வை தொடர்ந்து, சாம்சங், எல்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் எல்இடி டிவிக்களின் விலையை 6 சதவீதம் வரை உயர்த்தின. இந்நிலையில் எல்இடி டிவி பேனல்களுக்கான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி 15.6 இஞ்ச்க்கு அதிகமான திரை கொண்ட எல்இடி டிவிக்களில் பயன்படுத்தப்படும் ‘ஓபன் செல்’களுக்கான வரியை 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் எல்இடி டிவிக்களி் 95 சதவீதம் இந்த வகையை சேர்ந்தவை தான்.

இதுகுறித்து எல்இடி டிவி உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

‘‘மத்திய அரசின் வரி குறைப்பு எல்இடி உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தை தந்துள்ளது. இந்த வரிகுறைப்பை நிச்சயமாக வாடிக்கையாளர்களுக்கு தருவோம். விரைவில் எல்இடி டிவிக்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. இந்தியாவில் எல்இடி டிவிக்களின் விற்பனை அதிகரித்து வந்த நிலையில் வரி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போதைய வரி குறைப்பின் மூலம் மீண்டும் எங்கள் வர்த்தகம் உயரும்’’ எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close