[X] Close

மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.6.50 குறைப்பு: மானியமல்லாத எல்பிஜி சிலிண்டர் விலை அதிரடிக் குறைப்பு


cyclinder-rate-reduced

  • kamadenu
  • Posted: 01 Dec, 2018 08:14 am
  • அ+ அ-

பிடிஐ

மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலை ரூ.6.52 குறைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30 நள்ளிரவு முதல் மானிய விலை சிலிண்டர் தலை நகர் டெல்லியில் ரூ.500.90க்குக் கிடைக்கும், இது இப்போது வரை சிலிண்டருக்கு ரூ.507.42 என்று இருந்து வருகிறது. இந்நிலையில் விலையை குறைத்துள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

மானியமல்லாத எல்பிஜி சிலிண்டர் விலை சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.133 என்று கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது

கடந்த ஜூன் மாதத்திலிருந்து சமையல் எரிவாயு விலை தொடர்ந்து 6 மாதங்களாக விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்த உயர்வுகளை அடுத்து சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.14.13 உயர்வு கண்டது.

கடைசியாக நவம்பர் 1ம் தேதி எல்பிஜி விலை ரூ.2.94 அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து டெல்லியில் மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ. 809.50 என்று இன்று நள்ளிரவுமுதல் விலை குறையும்.

மானிய விலை சிலிண்டரைப் பொறுத்தவரை மானியங்கள் நேரடியாக பயனாளர்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படுகிறது, இது மாதாமாதம் மாற்றமடையும், ஏனெனில் சர்வதேச சந்தைக்கேற்ப விலை ஏற்றங்களை வைத்து இது மாறும். சர்வதேச விலைகள் அதிகரிக்கும் போது மானியத்தையும் அரசு அதிகரிக்கும், சர்வதேச விலைகள் குறையும் போது மானியத் தொகை குறையும்.

வரி விதிகளின் படி எல்பிஜி மீதான ஜிஎஸ்டி வரி சந்தை விலையில்தான் கணக்கிடப்படும். விலையில் ஒரு பகுதியை மானியமாக வழங்க அரசு முடிவெடுத்தாலும் வரி சந்தை விலைகளிலேயே செலுத்தப்பட வேண்டும்.

மானிய விலையில் சிலிண்டர் வாங்குபவர்கள் கணக்கில் டிசம்பர் மாதம் சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.308.60 மானியத் தொகை செலுத்தப்படும். இது நவம்பரில் ரூ.433.66ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close