[X] Close

1.8 கோடி மின்னஞ்சலை தவறாக பயன்படுத்திய சர்ச்சையில் சிக்கியது லிங்க்ட் இன்


linked-in-issue

  • kamadenu
  • Posted: 27 Nov, 2018 10:58 am
  • அ+ அ-

ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து லிங்க்ட் இன் நிறுவனமும் தகவல் மோசடியில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிங்க்ட் இன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும்.

ஃபேஸ்புக் தனது பயனாளர் களின் தகவல்களை முறைகேடா கப் பகிர்ந்து கொண்டதற்காக விசாரணைகளையும் சர்ச்சைகளை யும் சந்தித்து வருகிறது. இதனால் சமூக வலைதள நிறுவனங்களில் தனிநபர் தகவல் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியானது.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறு வனத்தைத் தொடர்ந்து லிங்க்ட் இன் நிறுவனமும் தகவல் மோசடி யில் சிக்கியுள்ளது. அயர்லாந்தின் தகவல் பாதுகாப்பு ஆணையம் லிங்க்ட் இன் நிறுவனம் மின்னஞ் சல்களைத் தவறாகப் பயன்படுத்தி யதாகக் கண்டுபிடித்துள்ளது. சுமார் 1.8 கோடி மின்னஞ்சல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. முக்கியமாக இந்த மின்னஞ்சல்கள் எதுவும் லிங்க்ட் இன் பயனாளர்களுடையது அல்ல என்றும் கூறியுள்ளது. இது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லிங்க்ட் இன் நிறுவனம் 1.8 கோடி மின்னஞ்சல்களை இலக்காக வைத்து ஃபேஸ்புக்கில் விளம்பரங் களைப் புரோமோட் செய்துள்ளதாக அயர்லாந்து தகவல் பாதுகாப்பு ஆணையம் கண்டுபிடித்துள்ளது. இது எந்தவித அனுமதியுமின்றி நடந் துள்ளது. லிங்க்ட் பயனாளி அல்லாத ஒருவர் பதிவு செய்த புகாரின் பேரில் அயர்லாந்து தகவல் பாதுகாப்பு ஆணையம் இந்த விசாரணையை நடத்தியுள்ளது.

இந்த விசாரணையில் லிங்க்ட் இன் நிறுவனம் விளம்பரங்களை ஊக்குவிப்பதற்காக மின்னஞ் சல்களைப் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது. இதையடுத்து தகவல் பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட மே 25ம் தேதிக்கு முன்னர் வரை சேகரிக்கப் பட்ட தகவல்களை அழிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லிங்க்ட் இன் நிறு வனத்தின் தனிநபர் தகவல் பாது காப்புப் பிரிவு தலைவர் டெனிஸ் கெல்லர் கூறியதாவது, “விளம்பர பிரச்சாரம் குறித்த புகார் எழுந்த தையடுத்து தகவல் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி யது. இதை வரவேற்கிறோம். விசாரணை யில் முழு ஒத்துழைப்பு வழங்கப் பட்டது. துரதிஷ்டவசமாக நிறுவனத் தின் நடைமுறைகள், விதிமுறை களைக் காப்பாற்றுவதில் தவறு நடந் துள்ளது. அதற்காக மன்னிப்பு கோருகிறோம். தேவையான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல் இனி நடக்காது என உறுதியளிக்கிறோம்” என்றார்.

இந்த மோசடிக்காக லிங்க்ட் இன் நிறுவனத்துக்கு எந்தவித அபரா தமும் விதிக்கப்படவில்லை. மேலும் 1.8 கோடி மின்னஞ்சல்கள் எப் படி லிங்க்ட் இன்னுக்கு கிடைத்தது என்பதும் தெளிவுபடுத்தவில்லை.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close