[X] Close

விஜய் மல்லையாவின் தங்க ‘டாய்லெட்’ பறிபோனது


vijay-mallaya-gold-toilet

  • kamadenu
  • Posted: 25 Nov, 2018 09:34 am
  • அ+ அ-

இந்திய வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிவிட்ட விஜய் மல்லையாவின் தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் வாங்கிய ரூ. 9000 கோடி கடனுக்காகவும், அவர் நாட்டை விட்டு தப்பியதற்காகவும் பல வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள அவரது சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அவரது லண்டன் சொத்துகளைப் பாதுகாக்க லண்டன் நீதிமன்றத்தில் அவரது சட்டக்குழு எவ்வளவு போராடியும் இறுதியில் தோல்வியடைந்தனர்.

இதனால் ஸ்விசர்லாந்தைச் சேர்ந்த யுபிஎஸ் வங்கி மல்லையாவின் அடமானக் கடனின் பேரில் லண்டன் கார்ன்வால் டெரஸில் உள்ள மல்லையாவின் ரீஜென்ட்ஸ் பார்க் மேன்ஷன் பறிமுதல் செய்யப்பட உள்ளது. அந்த மேன்ஷனில் மல்லையா வைத்துள்ள தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் இருக்கையும் பறிமுதல் செய்யப்படவுள்ளது.

யுபிஎஸ் வங்கிக்குச் செலுத்த வேண்டிய அடமானக் கடன் தொகை 20.4 மில்லியன் பவுண்ட் செலுத்தப்படாததால் இந்தச் சொத்துகளை வங்கிப் பறிமுதல் செய்கிறது. மேலும் லண்டன் நீதிமன்றம் யுபிஎஸ் வங்கிக்கு மல்லையா தரப்பு 88,000 பவுண்ட் இடைக்கால சட்ட கட்டணங்களாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close