[X] Close

தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையாவின் தடை கோரும் மனு நிராகரிப்பு


vijay-mallaya

விஜய் மல்லையா

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 18:53 pm
  • அ+ அ-

கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸுக்காக கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவை தலை மறைவு குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், அவரது சொத்து களை முடக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.

அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பி ஓடிவிட்ட விஜய் மல்லையாவை, தலை மறைவு குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தது.

இவ்விதம் அறிவிக்கக்கூடாது என்று விஜய் மல்லையா சார்பில் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு தடை விதிக்க முடி யாது என்று மும்பை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

இவ்விதம் தலைமறைவு குற் றவாளியாக அறிவிக்கப்பட்டால், அவருக்கு சொந்தமான சொத்து களை முடக்கும் அதிகாரம் அமலாக் கத் துறைக்கு கிடைக்கும்.

இம்மாதம் 26-ம் தேதி வரை இந்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அன்றைய தினம் மேல் முறையீட்டு ஆணையத்தில் இது தொடர்பான வழக்கு விசார ணைக்கு வருவதாகவும் மல்லையா சார்பில் கூறப்பட்டது.

இந்த மனுவை அக்டோபர் 30-ம் தேதியே சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. இதை யடுத்து அவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

நீதிபதிகள் ஆர்.எம். சாவந்த், வி.கே. ஜாதவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. தங்கள் தரப்பு வாதத்தை தவறுத லாக புரிந்து கொள்ளக் கூடாது என்று மல்லையா தரப்பு வழக்க றிஞர் அமித் தேசாய் வாதாடினார்.

கடன் அளித்த வங்கிகளுக்கு கடன் தொகையை திரும்ப அளிக்க தனது கட்சிக்காரர் (விஜய் மல் லையா) தயாராக இருப்பதாக குறிப் பிட்டார். அமலாக்கத்துறை முடக் கிய சொத்துகளை திரும்ப பெற வேண்டும் என்ற எண்ணம் மல்லை யாவுக்குக் கிடையாது.

ஆனால் தலைமறைவு குற்றவாளியாக அறி வித்தால் கடன் நிலுவையை திரும்ப செலுத்துவதில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே தலை மறைவு குற்றவாளி என்ற அறி விப்புக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வாதிட்டார். ஆனால் இந்த கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதி பதிகள் ஏற்கவில்லை.

 பிடிஐ

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close