[X] Close
 

பொதுத்துறை வங்கிகளில் ஆபத்துகளை கண்டறிய 15 நாள் கெடு


15-days-deadline-to-detect-risks-in-public-sector-banks

  • Team
  • Posted: 28 Feb, 2018 05:40 am
  • அ+ அ-

பொதுத்துறை வங்கிகளின் ஆபத்துகளை கண்டறிய 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி யில் நடந்துள்ள மோசடியை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

பொதுத்துறை வங்கிகளின் செயல் இயக்குநர்கள் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரிகள் வங்கியில் இருக்கும் ஆபத்துகளை கண்டறிய வேண்டும் என்று நிதிச் சேவைகள் துறை செயலாளர் ராஜீவ் குமார் தன்னுடைய சமூக வலை தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

செயல்பாடுகள் மற்றும் தொழில் நுட்ப ரீதியில் இருக்கும் ஆபத்துகளைக் கண்டறிந்து, அதற்குத் தேவையான தீர்வுகளை வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் பணியாளர்களுக்கு இருக்கும் பொறுப்புகள், செயல்படுத்தும் விதம் ஆகியவை குறித்த கணக்கீடுகளை வங்கியின் இயக்குநர் குழு வடிவமைக்க வேண்டும் என்றும் ராஜீவ் குமார் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close