[X] Close

பணக்கார ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பட்டியல்: பாஜக எம்எல்ஏவுக்கு முதலிடம்


real-estate-business

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 08:10 am
  • அ+ அ-

நாட்டின் அதிக சொத்து மதிப்பு கொண்ட ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் பட்டியலில், பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ மங்கள் பிரபாத் லோதா ரூ. 27,150 கோடி சொத்துடன் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியாவில் ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக பணம் ஈட்டியுள்ள 100 நிறுவனங்கள், தொழிலதிபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், லோதா குழுமங்களின் தலைவர் மங்கள் பிரபாத்  லோதா முதலிடம் பிடித்துள்ளார். லோதாவுக்கு ரூ.27,150 கோடி சொத்து இருப்பது தெரிய வந்தது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவான அவர் நீண்டகாலமாக, கட்டட காண்டிராக்ட் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்கி அவர் அங்கு பல முக்கிய கட்டடங்களை கட்டியுள்ளார். மும்பையில் உள்ள ட்ரம்ப் டவர் உள்ளிட்ட கட்டடங்கள் இவரது நிறுவனத்தால் கட்டப்பட்டதாகும்.

கடந்த ஆண்டு அவர் ரூ.18,610 கோடி சொத்துடன் 2-வது இடத்தில் இருந்தார். தற்போது ரூ.8540 கோடி சொத்து அதிகரித்து முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அதாவது ஒரே ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 22 சதவீதம் உயர்ந்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close