[X] Close

நிஸான் கார் நிறுவன தலைவர் அதிரடி பதவி நீக்கம்: நிதிமோசடி புகார்; சம்பளம் நிறுத்தி வைப்பு


nissan-car-issue

கார்லோஸ் கோஸன்

  • kamadenu
  • Posted: 19 Nov, 2018 17:22 pm
  • அ+ அ-

நிஸான் மற்றும் ரெனால்ட் நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஸன் நிதிமோசடி புகாரில் சிக்கி பதவி பறிக்கப்பட்டுள்ளார். அவரது சம்பளம் மற்றும் பணிகால தொகைகளை நிறுத்தி வைக்க நிஸான் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது

ஜப்பானைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் நிஸான். மிக மோசமான நிதிநிலையில் சிக்கி திவால்  நிலையில் இருந்த நிஸான் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு கார்லோஸ் கோஸன் ஏற்றார். ரெனால்ட் நிறுவனத்தின் தலைவராக இருந்த கார்லோஸ், உலக அளவில் கார் தயாரிப்பு நிறுவனத்தின் மிகச்சிறந்த தலைமை அதிகாரியாக இருந்தவர்.

அவரது வரவுக்கு பிறகு நிஸான் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது. திவால் நிலையில் இருந்து, மற்ற கார் கம்பெனிகளுடன் போட்டியிட்டு வளரும் அளவுக்கு உயர்ந்தது. நிஸானின் வளர்ச்சியில் கார்லோஸின் பங்கு முக்கியம் என பல தரப்பிலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக நிதிமோசடி புகாரில் கார்லோஸ் கோஸானை பதவி நீக்கம் செய்வதாக நிஸான் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து நிஸான் மோட்டார்ஸ் கம்பெனி லிமிடெட் கூறியுள்ளதாவது:

நிஸான் நிறுவனத்தின் டோக்கியோ பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட வரவு - செலவு  தொடர்பான கணக்குகளை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தன. அதில் குறிப்பிடப்பட்ட கணக்குகளுக்கும், நிறுவனத்தின் உண்மையான கணக்குகளுக்கும் இடையே பெரிய அளவில் இடைவெளி உள்ளது. கார்லோஸ் மற்றும் நிஸான் நிறுவனத்தின் இயக்குநர் பிரதிநிதி கேலேயும் பல மாதங்களாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

நிறுவனத்தின் பணத்தை எடுத்து தங்கள் சொந்த செலவுக்கு பயன்படுத்தியுள்ளனர். இதுமட்டுமின்றி நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி தவறான வழிகளில் செயல்பட்டு நிதிமுறைகேடுகளை செய்துள்ளனர்.

இதுபோன்ற நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டையும், வளர்ச்சியையும் வெகுவாக பாதிக்க கூடியது என்பதால் கார்லோஸ் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படுகிறார். அவருக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் பணிக்கால தொகைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் பிறந்த கார்லோஸ் கோஸன் பிரான்ஸ் நாட்டு குடிமகன். 64 வயதாகும் கார்லோஸ் பிரான்ஸ் நாட்டின் மிச்சிலியன் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து பின்னர் ரெனால்ட் நிறுவனத்தில் இணைந்தார். 1999-ம் ஆண்டு நிஸான் நிறுவனத்தின் பங்குகளை ரெனால்ட் நிறுவனம் வாங்கியபோது கார்லோஸ் அங்கு பணியை தொடங்கினார். 2001-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை நிஸான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கார்லோஸ் கோஸன் பணியாற்றினார்.

கார்லோஸ் பணிநீக்கம் தொடர்பாக ஜப்பான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சில பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. எனினும் அதனை உறுதப்படுத்த முடியவில்லை.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close