பாஜகவில் சேர்ந்ததால் என் அப்பா என்னிடம் பேசவே இல்லை: தமிழிசை சவுந்தர்ராஜன்


தொகுப்பு: தேவா

கடந்த வாரம் #GoBackModi முதல் விஜயகாந்துடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறி வரை இணையத்தில் பல விஷயங்கள் ட்ரெண்ட் ஆனாலும், இரண்டு வீடியோக்கள் அதிகமாகவே இணையத்தில் பரவின. அதில் ஒன்று கிரிக்கெட் வீரர் தோனி ரசிகர் ஒருவருடன் மைதானத்தில் ஓடிப் பிடித்து விளையாடிய வீடியோ. இன்னொன்று, உபியில் பாஜக எம்பியும் பாஜக எம்எல்ஏவும் செருப்பால் அடித்துக்கொண்ட வீடியோ.  கூல் கேப்டன் தோனி பல தருணங்களில் தனது குணத்தை வெளிப்படுத்தி

யிருக்கிறார். கேப்டனாக இருந்தாலும் சரி, விராட் கோலியின் கீழ் அணி உறுப்பினராக இருந்தாலும் சரி, தன்னுடைய வேலை என்னவோ அதைச் சரியாகச் செய்து நல்ல பெயர் வாங்கிவிடுவார். ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்தபோதிலும் அவருடன் ஓடிப்பிடித்து விளையாடி அவரைக் கட்டிப்பிடித்து நெகிழ்ச்சியுடன் அனுப்பிவைத்தார் தோனி. உபியிலோ, கல்வெட்டில் பெயர் இல்லை என்பதற்காக செருப்பால் அடித்துக்கொண்டார்கள் அரசியல்வாதிகள்! 

தமிழகத்திற்கு ஒன்று என்றால் ஓடோடி வருவேன்.- மோடி

புயல் அடிச்சாதாங்க பயம்..! மத்தபடி ஐ லவ் தமிழ்நாடு.- ஷிவானி சிவக்குமார்

திமுக கூட்டணியில் ஐஜேகே பச்சமுத்து பாரிவேந்தர்.- செய்தி

அடேங்கப்பா... கலைஞர் டிவி + சன் டிவி + புதிய தலைமுறை. மெகா கூட்டணிதான்.- ரஹீம் கஸாலி

அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு! - செய்தி

போற போக்கை பாத்தா, வாட்ஸ்-அப் குரூப் வச்சிருந்தாகூட ஒரு தொகுதி ஒதுக்குவாங்க போல..?! - குமாரு

கருப்புக் கொடி காட்ட வந்த வைகோ-வை ஷேர் ஆட்டோவில் ஏற்றி காவல் துறையினர்  கைது செய்தனர்.- செய்தி

மொத்த கட்சியையே அதில் அடைச்சிருந்தாலும் ரெண்டு ஸீட்டு காலியா இருக்குமேய்யா..! - கோபி