'மோடிக்கும் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் என்னவென்று தெரியாது': சுப்பிரமணியன் சுவாமி காட்டம்


எதிர்பாராத நேரத்தில் விபத்துகள் நடந்து விடுகின்றன. தனக்கும் முன்னால் டபுள்ஸ் போட்டுக்கொண்டு எக்ஸெல் சூப்பரில் சென்ற பெண் திடீரெனக் கை கூட காட்டாமல் வலதுபுறமாக செலுத்துவாள் என பிரதீப் எதிர்பார்த்தானா என்ன? இவன் என்னதான் மோதலைத் தவிர்க்க பிரேக்கை அழுத்தியும் இவனது எக்ஸெல் அவளுடைய வண்டியின் பின்பாகத்தில் இடித்துவிட்டது.

அந்தப் பெண்ணும் அவளின் பின்புறம் அமர்ந்திருந்த பெண்ணும் சாலையில் தொபுக்கடீரென விழுந்து விட்டார்கள். இவன் பேலன்ஸ் செய்து வண்டியை விழுக்காட்டாமல் இருக்க முயன்றும், வண்டியில் கட்டியிருந்த முப்பது லிட்டர் பால் கேன் கனத்தை தாங்க முடியாமல் கீழே சாய்த்து விட்டான்.

“உனக்கெல்லாம் யாரும்மா ஓட்டுநர் உரிமம் கொடுத்தது? திடீருன்னு வலது பக்கம் வர்றே?” என்றவனுக்கு அத்தனை பதற்றத்திலும் சாந்தினி பதில் கொடுத்தாள். “என் தாத்தா முத்துப்பாண்டி.” என்றவள், அப்போதுதான் பிரதீப்பை நன்றாகப் பார்த்தாள். அதன் பின், அவன் சாலையில் வண்டியில் செல்கையில் கவனிக்க வேண்டிய விசயம் பற்றி சொன்னவை எதுவும் அவள் காதில் ஏறவில்லை. தன்னை இப்படி வைத்த விழி மாறாமல் பார்ப்பவளை சட்டென உணர்ந்தவன் தலையில் கையால் தட்டிக்கொண்டு தன் வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றான்.

“எனக்கு அது வேணும் மாலினி?” என்று பிரதீப்பை நோக்கி விரல் நீட்டினாள் சாந்தினி.

“எதுடி சாந்தினி... அந்தண்ணன் பால் கேனா?” என்றாள் மாலினி.

“போன ஜென்மத்துல நானும் அவரும் புருஷன் பொஞ்சாதியா வாழ்ந்தோம். அவருக்கு அந்த ஞாபகம் துளி கூட தோணலையே” என்றாள் சாந்தினி.

“ஐயோ, அவர் எனக்கு அண்ணன் முறையடி சாந்தினி. இப்ப ஒரு வருஷமா பெருந்துறையில பிசியோதெரபி கிளினிக் வச்சிருக்காரு.பார்த்த உடனே எப்படியடி உனக்கெல்லாம் பத்திக்குது?” என்று மாலினி கேட்டபோது சாந்தினியின் மனதில், அம்மா நான்கு நாட்களாய் கால் மூட்டு ஆபரேசனுக்குப் பிறகு பெருந்துறையில் பிசியோதெரபி செய்துகொள்ள மாலையில் செல்கிறதே! அது இவர் கிளினிக்தானோ? என்ற சந்தேகம் எழுந்தது.

சாந்தினியின் அம்மா மரகதம் பெருந்துறை பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிகிறார். வீட்டில் ஒரே பெண் சாந்தினி. அப்பா ஆறு வருடங்களுக்கும் முன்பாக சாலை விபத்தொன்றில் காலமாகி விட்டார். சாந்தினி கொங்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு சென்று வந்துகொண்டிருந்தாள்.

சனி ஞாயிறு விடுப்பு என்பதால் திங்களூர் செல்லப்பம்பாளையம் கிராமத்திற்கு தன் தாத்தா பாட்டி வீட்டுக்கு இவளும் அம்மாவும் வந்திருந்தார்கள். திங்களூர் பால் சொசைட்டியில் ஒரு லிட்டர் பால் வாங்கி வரத்தான் தோழி மாலினியோடு காலையில் எக்ஸெலில் இவள் கிளம்பியது. இப்படியொரு மோதல் நடக்காமலிருந்திருந்தால் சாந்தினி தன் போன ஜென்மக் கணவனைக் கண்ணால் கண்டிருப்பாளா என்ன?

“அவரு பேரு என்ன மாலினி?” என்றவளிடம் ‘பிரதீப்’ என்றாள் மாலினி.

“பிரதீப் சாந்தினி! பேரு பொருத்தம் அழகா இருக்கில்லடி மாலினி” என்றாள் சாந்தினி.

“இருக்குது இருக்குது, இப்ப நாம் பால் வாங்க சொசைட்டிக்குப் போறமா இல்லையா?”

“மெதுவா போலாம், அவரு திரும்ப இது வழியாத்தானே வருவாரு? நான் இடுப்பு போன மாதிரி உட்கார்ந்துக்கறேன்டி” என்று சொன்னவள் மண் என்றும் பாராமல் கீழே அமர்ந்தாள். மாலினி தலையில் கை வைத்துக்கொண்டு காஞ்சிக்கோவில் சாலையை வெறித்தாள்.

“அதா இந்த ரோட்டுல நேரா ஒரு பர்லாங் போனா பிரதீப் அண்ணன் தோட்டமிருக்கு சாந்தினி. அவரு வீட்டுல இவரு ஒரே பையன். கூட அப்பா, அம்மா மட்டும்தான். நீயும் இப்பவே மருமகளா போயிட்டீன்னா காலையில மாடுகளை நிறுத்தி பால் கறந்து அவங்க சிரமங்களையெல்லாம் கொறைச்சிடலாம்” என்றாள் மாலினி. அப்போது பிரதீப் அவர்கள் எதிர்பார்த்தது போன்றே திரும்பி வந்தவன் இவர்களருகில் வண்டியை நிறுத்தினான். சாந்தினி உலகத்திலிருந்த அப்பாவித்தனம் அனைத்தையும் கூட்டி தன் முகத்தில் வைத்து அமர்ந்திருந்தாள்.

“அப்பவே எழுந்து நல்லாத்தானே நின்னுச்சு இந்தப் பாப்பா?” என்றான் பிரதீப்.

“வலிக்குதுன்னு உட்கார்ந்துட்டாள்ணா” என்று மாலினி பதில் சொல்கையில் சாந்தினி,  ‘‘நான் பாப்பா இல்ல” என்றாள் சப்தமாய். பிரதீப், அப்படியா? என்றபடி சாந்தினியைப் பார்க்க, அவளோ முகத்தை மூஞ்சூரு போல செய்து காட்டினாள். அவனுக்கு அவள் அப்படிச் செய்தது விளையாட்டுத்தனமாகவும், அழகாகவும் தெரிந்தது.

“நான்தான் கை போடாம தெரியாத்தனமா வண்டியைத் திருப்பிட்டேன் டாக்டர். என்னை மன்னிச்சுடுங்க” என்ற சாந்தினியைப் பார்த்த பிரதீப், ‘அதுக்குள்ள எல்லா விசயத்தையும் தெரிஞ்சிட்டா பாரேன்!’ என்று நினைத்து, “இனிமேலாச்சும் ரோட்டுல கவனமா வண்டியை ஓட்டு பாப்பா” என்று சொல்லிச் சிரித்தபடி இவன் வண்டியைக் கிளப்பினான்.

“அவருக்கும் போன ஜென்ம ஞாபகம் வந்திருக்கும்ல மாலினி? ”

“ரொம்ப அதிகம் பண்ணாதேடி” என்று சொல்லி சிரித்தாள் மாலினி.

சாந்தினியின் அம்மா மரகதம், பிரதீப்பின் கிளினிக்கில் மிக மகிழ்ச்சியாக அவனிடம் பேசிக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களாக சாந்தினியும் அம்மாவுடன் பிரதீப்பை பார்க்க வேண்டி கூடவே வந்துகொண்டிருந்தாள். அம்மாவின் கால் மூட்டுகளுக்கு ஆயில் மசாஜ் செய்ய பிரதீப்புக்கு ஒருமணி நேரமாகிவிடும். கிளினிக்கில் வேறு சிலரும் அந்த வேளையில் படுத்திருந்தார்கள்.

“உருளைக்கிழங்கு ஊறின தண்ணீர் தினமும் காலையில குடிக்கறீங்களாம்மா?” என்றான் பிரதீப்.

“ஆமாங்க தம்பி, உங்ககிட்ட ஒரு வாரம் ட்ரீட்மென்ட்டுக்கு வந்ததுல இப்பெல்லாம் ஸ்கூல்ல நின்னு வகுப்பெடுக்குறப்ப கால்ல வலி வர்றதில்லே!” என்றார்.

தான் விரும்புபவன் உலகத்திலுள்ள அனைத்து மூட்டுவலி தாய்மார்களிடமும் பாசமுடன் பழகுபவன் என்பதைத் தெரிந்து கொண்டவள் பதிலாக அவனுக்கு உலகத்திலுள்ள அனைத்துக் காதலையும் ஒன்று சேரக் குவித்துக் கொட்டி காதல் மழையில் குளிப்பாட்ட வேண்டுமென நினைத்தாள்.

சாந்தினி இவனைப் பார்க்கும் பார்வையிலிருந்து அது காதல் பார்வை என்பதை முதல் நாளே கிளினிக்கினுள் அவள் வந்தபோதே உணர்ந்துதான் இருந்தான் இவனும். இருந்தும் அவனுக்கு காதல் என்றாலே அலர்ஜிதான் படிக்கும் காலத்திலிருந்தே. பெண்கள் என்றால் பத்தடி தள்ளியே இருப்பான். படிக்க வந்த இடத்தில் படிப்பைக் கவனிக்காமல் என்ன காதல்?

காதல் என்றால் ஏராளமான பிரச்சனைகளைச் சந்தித்து வெற்றியடைய வேண்டுமென சொல்லிக் கொண்டிருந்த இவன் கல்லூரி நண்பன் ஒருவன், பிரச்சனைகளைச் சந்திக்க இயலாமல் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டது நான்கு வருடம் கழித்து ஞாபகத்துக்கு வந்தது.

பிரதீப் படிப்பை முடித்ததும் பெருந்துறையில் பிசியோதெரபி கிளினிக் ஆரம்பித்து விட்டான். பின்பாக நோயாளிகள் வர ஆரம்பித்ததும் அவர்களின் வேதனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டான்.

சாந்தினியின் காதலை அவள்தானே நகர்த்திச் சென்றாக வேண்டும்!அன்றைய இரவில்தான் பிரதீப் அலைபேசிக்கு சாந்தினி அழைத்திருந்தாள்.  ‘‘சாந்தினி பேசுறேங்க” என்று எச்சிலை விழுங்கிக்கொண்டே பேசினாள்.

“சொல்லுங்க சாந்தினி, அம்மாவுக்கு

ஏதேனும் இப்ப வலியா இருக்கா?”என்றான் வேண்டுமென்றே.

“அம்மா அப்பவே தூங்கிட்டாங்க! நான் உங்ககிட்ட பேசலாமா இப்ப. எனக்கு உங்களோட வாழணும்னு அன்னைக்கு ரோட்டுல விழுந்தப்பவே மனசுல தோனுச்சுங்க! தப்பா சரியான்னு எனக்குத் தெரியாது.. ஆனா உங்ககூட எப்பவும் இருக்கணும்னு மனசு சொல்லிட்டே இருக்குது” என்று முழுதாய் சொல்லிவிட்டு நெஞ்சை அழுத்தமாய் பிடித்துக் கொண்டாள்.

“படிக்கிற பொண்ணு நீங்க சாந்தினி. இப்போ படிப்புலதான் கவனமா இருக்கணும். உங்கம்மா உங்க மேல எவ்ளோ நம்பிக்கையா என்கிட்டே பேசினாங்க தெரியுமா?” என்று சொல்லிக்கொண்டிருந்தபோதே சாந்தினி தன் அலைபேசியை கட் செய்தாள். அவளுக்கு அழுகை வந்தது.

சாந்தினி அடுத்த நாள் காலையில் ஆறுமணிக்கு மீண்டும் பிரதீப்பை அழைத்தாள்.

“சொல்லுங்க சாந்தினி” என்று காதுக்குக் கொடுத்தான் பிரதீப்.

“என்னைப் பிடிக்குமா? பிடிக்காதா உங்களுக்கு?” என்று கேட்டவளின் குரலில் இருந்த சோகம் இவனைப் படுத்திற்று.

“சாந்தினி நான் சொல்றது உங்களுக்குப் புரியலை போல. நேத்து மாதிரி அணைச்சுடாதீங்க செல்போனை” என்று இவன் பேசுகையில் மீண்டும் அவள், ‘என்னைப் பிடிக்குமா, பிடிக்காதா உங்களுக்கு?’ என்று தன் கேள்வியிலேயே நின்றாள்.

“விடிய விடிய நான் தூங்கலை தெரியுமா. அழுதுட்டே இருந்தேன்! உங்களுக்கே என்னைப் பிடிக்கலைன்னா வேற யாருக்கும் என்னைப் பிடிக்க வேண்டாம். நானா என் மனசுல இருக்கிறதை உங்ககிட்ட சொன்னது தப்புத்தான். இனி கேக்குறதுக்கு நான் இருந்தால்தானே!” சொல்லிவிட்டு அணைத்துவிட்டாள் அலைபேசியை.

பிரதீப்பிற்கு பதற்றமாகி விட்டது. மனதில் பலதையும் நினைத்துக் குழம்பியவாறு சாந்தினியின் அம்மா எண்ணிற்கு அழைத்தான். மரகதம் சமையல் வேலையாய் நின்றிருக்க, ஒலித்த அலைபேசியை எடுத்து பிரதீப் என்று பார்த்து, ‘சொல்லுங்க தம்பி’ என்றார்.

“வீட்டுலயா இருக்கீங்க? சாந்தினி எழுந்துட்டாங்களாம்மா?” என்றான்.

“ஏன் தம்பி? அவளுக்கு என்ன? அவ ரூம்லதான் இருப்பா”

“இப்ப என்கிட்டே அரைமணிக்கும் முன்னால பேசினாங்கம்மா. கொஞ்சம் குழப்பமா பேசினாங்க. அவங்க பேச்சே ஒரு மாதிரியா இருந்துச்சு.. பார்த்துட்டு கூப்பிடுங்கம்மா” என்றான். அரைமணி நேரமாகியும் அழைப்பு வரவில்லை என்றதும் திருப்பி அவர்களைக் கூப்பிட்டு விசாரிக்க சங்கடப்பட்டு படுக்கையை விட்டு எழுந்தான்.

ஒன்பது மணிக்கு கிளினிக்கிற்கு பிரதீப் வந்தபோது இவனது அலைபேசிக்கு மரகதம் அம்மாவின் அழைப்பு வந்தது. ‘சொல்லுங்கம்மா’ என்று இவன் பேசுகையிலேயே அந்தம்மாவின் அழுகைச் சத்தம்தான் போனில் கேட்டது ‘சேலம் மருத்துவமனைக்கு வாங்க தம்பி’ என்று அழுகையினூடே மரகதம் அம்மா சொல்ல பறந்தடித்து இவன் பைக்கை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தான்.

ரிசப்சனில் விசாரித்து எமர்ஜென்ஸி வார்டுக்கு ஓடினான். வார்டின் முகப்பில் இருந்த பெஞ்சில் மரகதம் அம்மா அழுதுகொண்டு அமர்ந்திருந்தார். கூடவே இரண்டு ஆட்கள் அந்தம்மாவின் அருகில் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் இவனுக்குத் தகவலைச் சொன்னார்.

“பாப்பா ஒரு அட்டை தூக்க மாத்திரையை முழுங்கிடுச்சுங்க தம்பி. இப்ப உள்ளார அவங்க கூட்டிப்போயே ஒரு மணி நேரமாயிடுச்சு! இன்னமும் ஒருமணி நேரம் கழிச்சுத்தான் சொல்லுவேங்கறாங்க” என்றார்.இவனுக்கு தலை கிறுகிறுப்பாய் இருக்க சுவற்றைக் கைகளால் பிடித்துக் கொண்டான். நிதானத்திற்கு வர சில நிமிடங்களாயிற்று.

எமர்ஜென்சி அறைக்குள் செல்ல வந்த தாதிப்பெண்,  ‘‘ இங்கே இருக்காதீங்க எல்லோரும். கீழ ரிசப்சன்ல போய் இருங்க. வயிற்றை சுத்தப்படுத்திட்டாரு டாக்டர். இன்னும் ஒரு மணி நேரத்துல பேஷன்ட் கண்ணு முழிச்சுட்டா வந்து கூப்பிடறேன். பயப்படாதீங்க’’ என்று சொல்லிச் செல்லவும், அவர்கள் மரகதம் அம்மாவை கூட்டிக்கொண்டு ரிசப்சன் வந்தார்கள்.

 இவர்களை ரிசப்சனுக்கு அனுப்பிய செவிலி சிறிது நேரம் கழித்து இவர்களிடம்,  ‘‘அந்தப் பொண்ணு கண்ணு விழிச்சுடுச்சு, இனிப் போயிப் பாருங்க” என்று சொன்னதும், இவன்தான் முதலாக படிகளில் சாந்தினியைப் பார்க்க ஓடினான்.