வெற்றிக்காகப் பெண்கள் படும் பாடு


anandh-mahindra

ட்விட்டரில் ஆக்கபூர்வமாக இயங்கும்  மிகச் சில ஆளுமைகளில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர். சமீபத்தில் அவர் பகிர்ந்த ஒரு புகைப்பட ட்வீட் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பலரது கவனத்தைப் பெற்றது. அந்தப் புகைப்படத்தில் ஒரு ஓட்டப் பந்தய மைதானம். அதில் மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் ஓடத் தயாராக இருக்கிறார்கள். ஆண்கள் ஓடும் டிராக்கில் எந்தத் தடைகளும் இல்லை. ஆனால், பெண்கள் ஓடும் டிராக்கில் கொடியில் காயவைக்கப்பட்ட துணிகள், அதைத் தாண்டினால் டிஷ்வாஷ், அடுத்து வாஷிங் மெஷின், அயர்னிங் டேபிள் போன்ற வீட்டு உபகரணங்கள் இருக்கின்றன. வீட்டையும் பார்த்துக்கொண்டு, வேலைக்கும் போகும் பெண்களுக்கான வெற்றி என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. அவர்களுக்குத் தலை வணங்குகிறேன் எனப் பதிவு செய்துள்ளார் ஆனந்த். எப்போதும் பிசி பிசினஸ்மேனாக சுற்றுபவர் கடந்த வாரம், பேரப் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதற்காக வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது அவர் அடைந்த அனுபவத்தை இவ்வாறு பதிவு செய்திருந்தார். இது கடந்த வாரம் சமூக வலைதளத்தில் வைரலானது.

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN