ஹாட் லீக்ஸ்: யாரைப் பார்த்து கையாட்டினார் மோடி?
ஸ்ட்ரைட்டா அமைச்சர்தான்!
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் விருப்ப மனு வாங்கிக் கொண்டிருக்கிறது அதிமுக. பலரும் போட்டிபோட்டு மனு கொடுத்துக்கொண்டிருக்க, திருச்சி எம்பி-யான குமார், “ரெண்டு முறை எம்பியா இருந்தாச்சு. இனிமே நமக்கு மாநில அரசியல்தான். சட்டமன்றத் தேர்தல்ல திருவெறும்பூர் தொகுதியில நின்னு அமைச்சராகுறதுதான் அடுத்த வேலை” என்று சொல்கிறாராம். அதனால், இன்னமும் நேரில் சென்று விருப்ப மனு கொடுக்காமல் இருக்கிறார் குமார். ஆனாலும் அவரது விசுவாசிகள் சிலர், எதற்கும் இருக்கட்டுமே என்று அவர் பெயருக்குப் பணம் கட்டி வைத்திருக்கிறார்கள்.