பேசிக்கிட்டாங்க...


jokes-speech

 

தஞ்சாவூர்
ரயிலடியில் இருவர்...

``என்னய்யா இது... ஸ்ட்ராங்கான சவுத் ஆப்பிரிக்காவ நோஞ்சான் பங்களாதேஷ் தோக்கடிச்சிருச்சி!''

''கிரிக்கெட்ல என்ன வேணா நடக்கலாம்பா...யானை கணக்கா உடம்பு இருக்கிற உன்னைய ஒட்டடக் கம்பா இருக்கிற உம் பொண்டாட்டி விட்டு வெளுக்குறது இல்லையா..?''

``நானே நொந்து நூடுல்ஸ் ஆகிக்கிடக்கிறேன்... நீ வேற உடம்பு வலியை ஞாபகப்படுத்திக்கிட்டு!''

 தஞ்சாவூர், ராம்ஆதிநாராயணன்


வேலூர்
அண்ணாசாலை டீக்கடையில் இருவர்...

``மாஸ்டர்... தேர்தல் எல்லாம் முடிஞ்சி இப்பத்தான் கடை அமைதியா இருக்குல்ல..?

``ஆனா மாம்ஸ்... அண்ணணுக்கு அப்ப இருந்த
வருமானம் இப்ப இருக்காதுல்ல..!”
மாஸ்டர் குறுக்கிட்டு,'' அதெல்லாம்
இல்லை... அப்ப வாங்கற அளவு
தான் இப்பவும் பால் வாங்கறேன்..!''
``இல்லையே... இப்ப டீ முன்ன விட
திக்கா டேஸ்ட்டா இருக்கே..!''
``அப்ப முன்ன நான் பால்ல தண்ணி
சேர்த்து டீ போட்டேன்னு சொல்றியா..?''
``நான் ஒண்ணுமே சொல்லலையே... நீங்களா வந்து ஏன் சீக்ரெட்ட சொல்றீங்க!''

 காட்பாடி, அ.சுகுமார்

சீர்காழி
தமிழிசை மூவர் மணிமண்டபம் வாசலில் இருவர்...


``மறுபடியும் எட்டுவழிச் சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம்னு ஆரம்பிச்சுட்டாங்க மச்சி...''

``உள்ளாட்சியில ஜெயிக்க பிடி கிடைச்சுடுச்சுன்னு சொல்லு...''

``உள்ளாட்சியில ஜெயிச்சு டெல்லிக்கா போக முடியும்?''

``முதல்ல கோட்டைக்கு போக வழியைப் பாருய்யா...''

``கோட்டைக்கா... இங்க திகார்க் கில்ல வழி காட்டறாங்க மச்சி...'' 
சீர்காழி, பி.கே.ராதா

ராயப்பேட்டை
இரண்டு நண்பர்கள்...


“என்னப்பா! இனி ஹிந்தியை கட்டாயப்பாடம் ஆக்கப் போறாங்களாமே?”

“நாம தமிழ் மட்டுமே பேசுறதால , நம்மூருக்கு வடநாட்டுலருந்து வந்து பானிபூரி விற்கிறவங்க, ஓட்டல்ல சப்ளை செய்றவங்க, கூலிவேலை செய்றவங்க எல்லாம் புரிஞ்சுக்கிறதுக்கு ரொம்ப சிரமப்படுறாங்களாம் !”

“ஓஹோ! அவங்க சிரமத்தை தவிர்க்க நம்மை ஹிந்தி படிக்கச் சொல்லி சிரமப்படுத்த போறாங்களாக்கும்.”

சென்னை, எ.எம்.முகமது ரிஸ்வான்

புதுக்கோட்டை
பேருந்து நிலையம் அருகே உணவகம் ஒன்றில் சாப்பிடும் இருவர்...


``சாப்பிட்டதும் இலையில் கொஞ்சம் மிச்சம் வைச்சிட்டுப் போகணும்.’’
``ஏன் அப்படி?”
``நம்ம போடுற எச்சில் இலையை சாப்பிட வந்து ஏமாந்து போன நாய், நமக்கு முன்னாடியே வேறு ஒரு நாய் வந்து நக்கிட்டு போயிச்டுச்சுன்னு நினைக்கும் இது தெரியாதா உனக்கு?’’
``எனக்கெப்படி தெரியும்... ஒரு நாய் என்ன நினைக்கும்னு இன்னொரு நாய்க்கு தாண்டா தெரியும்!”

நாட்டரசன்கோட்டை, ஜோ.ஜெயக்குமார்