அணியின் ஜெர்சியும் அதிர்ச்சி தோல்வியும்!


social-media

தொகுப்பு: தேவா

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துடனான ஆட்டத்தின்போது இந்தியா வழக்கமான ஜெர்சியை அணியாமல், காவி வண்ணம் கலந்த ஜெர்சியை அணிந்து விளையாடியது. அந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வி கண்டது. இத்தனை ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த வண்ணத்தை காவி வண்ணமாக மாற்றியதில் பாஜக அரசுக்குத் தொடர்பிருக்கலாம் என்று பலரும் ஊகிக்கத் தொடங்கியதன் விளைவு. பிசிசிஐ மற்றும் இந்திய அணி வீரர்கள் உட்பட அனைவரையும் குறிப்பிட்டு கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்கள்.  “இந்தியா தோற்கக் காரணம் இந்தக் காவி ஜெர்சிதான், அடுத்த ஆட்டத்திலாவது ஜெர்சியை மாற்றுங்கள்” என்று ஒரு பக்கம் கொந்தளிக்க, மற்றொரு பக்கம் தமிழிசை வான்ட்டடாக உள்ளே வந்து, “ ஜெர்சி நிற மாற்றத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை” என்று பதில் சொல்லியதும், அப்போ இது பாஜக பாத்த வேலைதான் என முடிவுக்கே வந்த நெட்டிசன்கள், “ஏன் இந்தியா ஜெயிக்க அப்படியே அண்டாவில் இறங்கி யாகம் பண்ன வேண்டியதானே” என்று பதிவிட ஆரம்பித்துவிட்டனர். மொத்தத்தில், கண்ணாடிய திருப்புனா எப்படி ஜீவா வண்டி ஓடும் என்ற நிலைமைக்கு மாறிவிட்டது இந்திய அணியின் ஜெர்சி விவகாரம்.

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN