ஆன்லைன் ஸ்டார் அபிநந்தன்


abinandhan

தொகுப்பு: தேவா

சில நேரங்களில் எதிர்பாராமல் ஒரே நாளில் மக்களிடையே பிரபலமாகும் வாய்ப்பு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அப்படித்தான் இதுவரை முகம் தெரியாமல் இருந்த அபிநந்தன் கடந்த வாரம் உலகப் பிரபலமானார். கடந்த வாரம் முழுக்க சமூக வலைதளங்களிலும் சரி ஊடகங்களிலும் சரி... இந்தப் பெயர்தான் வைரல். பாகிஸ்தானிடம் சிக்கிய விமானி அபிநந்தன் என ஆரம்பித்து அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் எனத் தகவல் வெளியானதும் இன்னும் இங்கு தீயாய் பற்றிக்கொண்டது. அவருக்கு பாகிஸ்தான் ராணுவம் டீ கொடுத்தது முதல் அவருடைய விவாதம் வரை அனைத்தும் வீடியோக்களாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுத்ததை விட அபிநந்தன் செய்திதான் டாப் ட்ரெண்டிங். ஒருவழியாக அவரை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். இந்தப் பரபரப்புக்கு நடுவில், போர் அவசியமா என்ற விவாதமும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டன.

எடப்பாடிக்கு தைலாபுரத்தில் வெள்ளிக்கிழமையன்று விருந்து. - செய்தி

500 கோடியும் ஏழு ஸீட்டும் வாங்கி இருக்கே... ஒரு ட்ரீட் கூட தரலேன்னா எப்புடி மச்சி? - சையத் கலீல்

கூட்டணிக்கு அழைத்த கமலின் அழைப்பை நிராகரித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி! - செய்தி

அவங்களே எல்லார்கிட்டேயும் உண்டியல் எடுத்துட்டுப் போவாங்க. நீ அவங்க கிட்டயே உண்டியல் எடுத்துட்டுப் போனா யாவாரம் ஆகுமா..? - முகமூடி

ஜெ பிறந்தநாள் விழாவுக்கு திருட்டு கரன்ட் எடுத்த தினகரன் கட்சியினர்.

- செய்தி

டேய் என்னங்கடா இது... நாட்டோட பிரதமரையே முடிவு பண்றவங்கனு சொல்லிட்டு வீட்டுக்குப் போற கரன்டை திருடியிருக்கீங்க!? - ராஜராஜன்

அதிமுக தலைமை அலுவலகத்தில் மோடி படம்.- செய்தி

ஹோட்டல்ல ‘ஓனர்’ படம் வைக்கிறது நடைமுறைதானே... - சேர்மதுரை