’பிக் பாஸ் டீம் மேல செம கோபத்துல இருக்கேன்’ - டேனியல்


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களைக் கடந்து இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் தற்போது 7 பேர் மட்டுமே உள்ளனர். 

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட டேனியல் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், தான் பிக்பாஸ் டீம் மீது கோபமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அதில் அவர் பேசியதாவது,

”பிக்பாஸ் வீட்டில் அனைத்தும் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் டாஸ்க் என்று ஒன்று வந்து விட்டால் மஹத்துக்கும் எனக்கும் முட்டிக் கொள்ளும்.

மஹத் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுவார். அவர் கூட இருப்பவர்களின் பேச்சைக் கேட்டுகொண்டு அவ்வாறு நடந்து கொண்டார் என்று கருதுகிறேன்.

ஆனால் மஹத் மீது இருந்த கோபத்தை விட, அவர் வெளியே செல்லும்வரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத பிக்பாஸ் டீம் மீதுதான் எனக்கு பயங்கர கோபம். 

என்னை ப்பார்த்து பெண் போல நடப்பதாக கூறினார். மும்தாஜைப் பார்த்து ‘பொம்பள’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினார். என்னை தாக்கவும் செய்தார். ஆனால் பிக்பாஸ் எதற்குமே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு டேனியல் கூறினார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்