‘ஆவேஷம்’ முதல் ‘மாமன்னன்’ வரை - தவறவிடக் கூடாத 10 ஃபஹத் ஃபாசில் படங்கள்


1 / 10
மகேஷிண்டே ப்ரதிகாரம்: மலையாளத்தில் திலீஷ் போத்தன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மகேஷ் என்ற கதாபாத்திரத்தில் பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றத்தில் நடித்திருப்பார் ஃபஹத். இப்படம் தமிழிலும் ரீமேக் ஆனது.
2 / 10
மாலிக்: ‘நாயகன்’ பாணியிலான இந்த திரைப்படத்தில் நடிப்பில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியிருப்பார் ஃபஹத். இளவயது, நடுத்தர, முதிய கதாபாத்திரங்களை வெவ்வேறு பரிணாமங்களை காட்டியிருப்பார்.
3 / 10
அன்னாயும் ரசூலும்: இயக்குநர் ராஜீவ் ரவியின் முதல் படமான இது காதல் கதையைக் கொண்டது. ஃபஹத் - ஆண்ட்ரியா இருவருமே போட்டி போட்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
4 / 10
ஞான் பிரகாஷன்: வெளிநாட்டு ஆசையில் வாழும் ஒரு சோம்பேறி இளைஞன் கதாபாத்திரம் ஃபஹதுக்கு. இதில் பக்கத்து வீட்டு பையன் போல் தோன்ற வைக்கும் அவர் காமெடியில் அசத்தியிருப்பார்.
5 / 10
அயோபின்டே புஸ்தகம்: சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதை. அமல் நீரட் இயக்கிய இப்படத்தில் காதல், செண்டிமெண்ட், எமோஷன் என பல முகங்களை ஃபஹத் காட்டியிருப்பார்
6 / 10
ஜோஜி: மிகவும் சிம்பிளான ஒரு படம். ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாடகத்தின் தழுவல். கரோனா காலகட்டத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படத்தின் தனது நெகட்டிவ் ஆன கேரக்டரின் மூலம் ஒவ்வொரு காட்சியிலும் பயமுறுத்தியிருப்பார் ஃபஹத்.
7 / 10
ஆவேஷம்: திரையரங்கிலும், அதனைத் தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது இப்படம். இதில் காமெடி கலந்த வில்லத்தனம் கொண்ட கதாபாத்திரம் ஃபஹதுக்கு. வெளியானது முதல் இன்று வரை மீம்களில் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கும் கேரக்டர்.
8 / 10
மாமன்னன்: படத்தின் பிரதான கதாபாத்திரங்களை பின்னுக்குத் தள்ளி ஒரு வில்லன் கதாபாத்திரம் பரவலாக பாராட்டப்பட்ட சம்பவம் வேறு எந்த படத்துக்கும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு ரத்னவேல் என்ற கேரக்டரில் வில்லத்தனத்தில் கலக்கியிருப்பார் ஃபஹத்.
9 / 10
கும்ப்ளாங்கி நைட்ஸ்: மது சி. நாராயணன் இயக்கிய இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுக்கு நெகட்டிவ் கதாபாத்திரம். குறைவான காட்சிகளே வந்தாலும் க்ளைமாக்சில் கண்களாலேயே மிரட்டியிருப்பார்.
10 / 10
தொண்டிமுதலும் திருக்சாக்‌ஷியும்: இதிலும் ஃபஹத் ஃபாசிலுக்கு எதிர்மறை கதாபாத்திரம் தான். படம் முழுக்க பார்க்கும் நமக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார். திலீஷ் போத்தன் இயக்கிய இப்படத்துக்காக ஃபஹதுக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
x