Loading
Loading
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
மேலும்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
×
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
Home
ஆல்பம்
3 புதிய குற்றவியல் சட்டங்கள்: அறிய வேண்டிய 10 அம்சங்கள்
KU BUREAU
01 Jul, 2024 08:10 PM
1
/ 11
இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இந்த மூன்று சட்டங்களின் கீழ் செய்யப்பட்டுள்ள 10 முக்கிய மாற்றங்கள்:
2
/ 11
1. புதிய சட்டத்தின்படி கிரிமினல் வழக்குகளில் விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். வழக்கின் முதல் விசாரணையில் இருந்து 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டினை பதிவு செய்ய வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் சாட்சியங்களைப் பாதுகாக்க உரிய ‘சாட்சி பாதுகாப்புத் திட்டங்களை’ செயல்படுத்த வேண்டும்.
3
/ 11
2. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களை பெண் காவல் அதிகாரி பதிவு செய்வார். அப்போது பாதிக்கப்பட்ட நபரின் பாதுகாவலர் அல்லது உறவினர் உடன் இருக்கலாம். உரிய மருத்துவ அறிக்கைகள் 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
4
/ 11
3. இந்தப் புதிய சட்டத்தின்படி சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் குற்றத்துக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை வாங்குதல், விற்பனை செய்தல் கடுங்குற்றமாகக் கருதப்படுகிறது. பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
5
/ 11
4. திருமண ஆசைகாட்டி பெண்களை ஏமாற்றி கைவிடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.
6
/ 11
5. பெண்களுக்கு எதிரான குற்றங்களில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழக்கு குறித்த அவ்வப்போதைய தகவல்களை வழக்கு பதிவான முதல் 90 நாட்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளும் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், பெண் குழந்தைகளுக்கு ஒலவச மருத்துவ முதலுதவி அல்லது மருத்துவ சிகிச்சை வழங்குவது கட்டாயமாகும்.
7
/ 11
6. குற்றவாளி, பாதிக்கப்பட்ட நபர் என இருதரப்புமே வழக்கு பதியப்பட்ட 14 நாட்களுக்குள் முதல் தகவல் அறிக்கையின் நகல், போலீஸ் அறிக்கை, குற்றச்சாட்டு, வாக்குமூலங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் என அனைத்தையும் பெற தகுதியானவர்களாவர். கிரிமினல் வழக்குகளில் இரண்டு வாய்தாக்கள் மட்டுமே நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணையில் தேவையற்ற தொய்வைத் தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
8
/ 11
7. குற்றச் சம்பவங்கள் பற்றி மின்னணு சாதனங்கள் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம். இதன்மூலம் காவல் நிலையத்துக்குத்தான் நேரில் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் தவிர்க்கப்படும். அதேபோல், ஜீரோ எஃப்ஐஆர் (Zero FIR) அமலுக்கு வருகிறது. இதன் மூலம் காவல் சரக பிரச்சினையைக் கடந்து எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படலாம்.
9
/ 11
8. கைது செய்யப்பட்ட நபர் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப தங்களின் நிலை பற்றி யாரேனும் ஒருவருக்கு தகவல் அளிக்கும் உரிமை உள்ளது. அவர்களுக்கான உடனடி உதவிக்காக இது அமல்படுத்தப்படுகிறது. கைது விவரங்கள் காவல் நிலையத்திலும், மாவட்ட தலைமையகத்திலும் முறையாகத் தெரிவிக்கப்படும். இதன்மூலம் கைது தகவலை அந்த நபரின் உறவுகள், நட்புக்கள் அறிந்து கொள்ள முடியும்.
10
/ 11
9. மிகவும் மோசமான கிரிமினல் குற்றச் சம்பவங்களின்போது நிகழ்விடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் செல்வது கட்டாயமாக்கப்படுகிறது. சம்மன்களை மின்னணு உபகரணங்கள் வாயிலாகவும் அனுப்பலாம். இதன்மூலம் வழக்கு விசாரணையில் வீண் தொய்வைத் தடுக்க இயலும். அதேபோல் மிக மோசமான குற்றச் செயல்களில், நிகழ்விடத்தினை வீடியோ பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.
11
/ 11
10. பாலினத்தின் விளக்கமானது இப்போது மாற்றுப் பாலினத்தவரையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான சில குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபரின் வாக்குமூலத்தை வாய்ப்பிருக்கும் இடத்தில் மாவட்ட பெண் நீதிபதி பதிவு செய்து கொள்வார். ஒருவேளை பெண் மாஜிஸ்திரேட் இல்லாதபட்சத்தில் ஆண் மாஜிஸ்திரேட் பதிவு செய்து கொள்ளலாம். இருப்பினும் அவ்விடத்தில் இன்னொரு பெண் இருப்பது அவசியமகும். பாலியல் வன்கொடுமை தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் காணொலி வாயிலாக பதிவு செய்யப்பட வேண்டும்.
மேலும் ஆல்பங்கள்
#குற்றவியல் சட்டங்கள்
#new criminal
#codes
#3 சட்டங்கள்
x