Loading
Loading
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
மேலும்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
×
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
Home
ஆல்பம்
போட்டோ ஸ்டோரி | ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியும், சாம்பியன் KKR-ன் வெற்றி தருணங்களும்!
KU BUREAU
27 May, 2024 02:08 PM
1
/ 25
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. | படங்கள்: ஆர்.ரகு, தீபக்
2
/ 25
தொடக்கத்திலேயே பந்துகள் நன்கு ஸ்விங் ஆகின. அதேவேளையில் சீரான பவுன்ஸும் இருந்தது. மேலும் பந்தை இறுகப்பிடித்து வீசமுடிந்ததால் சரியான திசையில் பந்துகளை வீசி கொல்கத்தா அணி வீரர்கள் அழுத்தம் கொடுத்தனர். மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரிலேயே தனது ஸ்விங்கால் அபிஷேக் சர்மாவை (2) போல்டாக்கினார்.
3
/ 25
ஸ்டார்க் பந்தை முதல் ஓவரில் எதிர்கொள்வதை தவிர்த்த டிராவிஸ் ஹெட் (0), வைபவ் அரோரா வீசிய 2-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து நடையை கட்ட ஹைதராபாத் அணி அதிர்ச்சியில் உறைந்தது. பவர்பிளே முடிவதற்குள் ராகுல் திரிபாதியையும் (9) வெளியேற்றினார் மிட்செல் ஸ்டார்க். இதன் பின்னர் களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி (13), ஹர்ஷித் ராணா பந்தில் நடையை கட்டினார்.
4
/ 25
7 ஓவர்களில் 47 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன் ஜோடி சற்று நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாட முயற்சித்தது. ஆனால் இது வெகுநேரம் நீடிக்கவில்லை. எய்டன் மார்க்ரம் 20 ரன்களில் ஆந்த்ரே ரஸ்ஸல் பந்தை லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க மிட்செல் ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆனது. இதன் பின்னர் சீரான இடைவெளியில் ஹைதராபாத் அணி விக்கெட்டை இழந்தது.
5
/ 25
ஷாபாஷ் அகமது 8 ரன்னில் வருண் சக்ரவர்த்தி பந்தில் வெளியேறினார். தொடர்ந்து அப்துல் சமத் (4) ஆந்த்ரே ரஸ்ஸல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஹென்ரிச் கிளாசன் 16 ரன்களில் ஹர்ஷித் ராணா பந்தில் போல்டானார். ஜெயதேவ் உனத்கட் 4 ரன்களில் சுனில் நரேன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
6
/ 25
இறுதிக்கட்ட ஓவர்களில் மட்டையை சுழற்றிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 19 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டாக ஆந்த்ரே ரஸ்ஸல் பந்தில் பெவிலியன் திரும்பினார்.
7
/ 25
கொல்கத்தா அணி தரப்பில் ஆந்த்ரே ரஸ்ஸல் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வைபவ் அரோரா, சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
8
/ 25
114 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 10.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெங்கடேஷ் ஐயர் 26 பந்துகளில், 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 52 ரன்களும் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 6 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
9
/ 25
முன்னதாக சுனில் நரேன் 6 ரன்களில் பாட் கம்மின்ஸ் பந்திலும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 32 பந்துகளில், 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஷாபாஷ் அகமது பந்திலும் ஆட்டமிழந்தனர்.
10
/ 25
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் அந்த அணி 2012 மற்றும் 2014-ம் ஆண்டில் கோப்பையை வென்றிருந்தது. | படங்கள்: ஆர்.ரகு, தீபக்
11
/ 25
12
/ 25
13
/ 25
14
/ 25
15
/ 25
16
/ 25
17
/ 25
18
/ 25
19
/ 25
20
/ 25
21
/ 25
22
/ 25
23
/ 25
24
/ 25
25
/ 25
மேலும் ஆல்பங்கள்
#கொல்கத்தா
#ஐபிஎல் 2024
#ஆல்பம்
#IPl 2024
#album
#kkr
x