[X] Close
 

ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை அவமதித்த அமெரிக்கர்


is-this-halloween-or-something-us-man-asked-muslim-woman-with-veil

  • kamadenu
  • Posted: 16 May, 2018 13:01 pm
  • அ+ அ-

அமெரிக்காவில் முகத்தை மூடி கண்கள் மட்டும் தெரியும்படி ஹிஜாப் அணிந்துவந்த இளம் பெண்ணை அமெரிக்கர் ஒருவர் அவமதித்த சம்பவம் நடந்துள்ளது. கலிஃபோர்னியா மாகாணத்தில் ரிவர்சைட் எனும் சிற்றுண்டி கடையில் அமீனா என்ற பெண் உணவு பதார்த்தம் வாங்கச் சென்றிருக்கிறார். 

அப்போது எதிர்முனையில் நின்றிருந்த கடைக்காரர் அந்தப் பெண்ணைப் பார்த்து, "இது என்ன ஹாலோவீன் திருவிழாவா" என வினவியுள்ளார்.அதிர்ந்துபோனாலும் ஆவேசப்படாத அமீனா, "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்" எனக் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நபர், "நான் ஏன் அப்படிக் கேட்கக்கூடாது" என சற்று ஆவேசமாக பதிலளித்திருக்கிறார்.
அப்போதும் விடாத அமீனா, "ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்" என்று கேட்க அதற்கு அவர் ஆவேசமாக, "ஏனென்றால் அப்படிச் சொல்ல வேண்டும் எனக்கு தோன்றியது" என்று கூறியுள்ளார்.
அமீனா விடுவதாகத் தெரியவில்லை, "ஏன்? என்னிடம் என்ன தவறு கண்டீர்கள்?" என்றார்.
"நீங்களே சொல்லுங்கள் உங்களிடம் என்ன தவறு என்னவென்று?" என பதில் வந்தது.
"நான் முஸ்லிம் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று அமீனா கேட்டுள்ளார்.
அந்தப் பெண்ணை கூர்ந்து பார்த்துவிட்டு, "ஆமாம்.. எனக்குத் தெரியும்" என்று கடைக்காரர் பதில் சொல்லியிருக்கிறார்.
"என்னிடம் அப்படி உங்களுக்கு என்னதான் பிரச்சினை?"
"எனக்குத் தெரியாது., இந்த பதில் எப்படியிருக்கு?" (இவ்வாறு கூறியவாறே அந்த நபர் கேமராவின் மிக அருகே தனது முகத்தைக் காட்டியதுடன் பற்களையும் கடித்தார்.
"எனக்கு உங்கள் மதம் பிடிக்காது. உங்கள் மதம் எங்களைக் கொல்லச் சொல்கிறது. நான் உன்னால் கொலை செய்யப்பட விரும்பவில்லை. இந்த பதில் எப்படி இருக்கிறது?" என மீண்டும் நக்கலாகப் பேசினார்.
அதற்கு அந்தப் பெண், "நீங்கள் குரான் வாசித்திருக்கிறீர்களா?" என வினவினார்.
அந்த நபரோ "தேவையான அளவு படித்துவிட்டேன்" எனப் பதில் கூறினார்.
"நீங்கள் கிறிஸ்துவரா?"
அமீனாவின் இந்தக் கேள்விக்கு சிறிய மவுனத்துக்குப் பின், "நிச்சயமாக" என அவர் பதில் அளித்தார்.
"அப்படி என்றால் பைபிள் பற்றி பேசுவோம்.. அதில்கூடத்தான் நம்பிக்கையற்றவர்களைக் கொல்லுமாறு கூறப்பட்டிருக்கிறது" என்றார் அமீனா.
அமீனாவின் கேமரா முன் கையை அசைத்து பேச விரும்பவில்லை என்பதுபோல் சமிக்ஞை செய்தார் அந்த நபர்.
அமீனாவோ, "நீங்கள் வெறுப்பை பேச்சின் மூலம் விதைக்கிறீர்கள்" என்று அமீனா கூச்சலிட்டார்.

இப்படி காரசாரமாக இருவரும் பேசிக் கொண்டிருக்க கடையில் கூட்டம் கூடியது. அங்கிருந்த வாடிக்கையாளர்கள் ஒருவர் கூறியதன்படி பார்த்தால் அமீனா மருத்துவ மாணவி எனத் தெரிகிறது.
மொத்த உரையாடல்களையும் அந்த மாணவி தனது கேமராவால் படம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close