[X] Close
 

சப்தமில்லாமல் நடக்கும் உதகை நகர காவல் நிலைய போலீஸார் 'காதல்' பஞ்சாயத்து


ooty-police

  • பாரதி
  • Posted: 17 Apr, 2018 08:45 am
  • அ+ அ-

உதகை மத்திய காவல்நிலைய ஆய்வாளரின் பஞ்சாயத்தால் மாவட்ட காவல்துறை சங்கடத்தில் சிக்கி தவிக்கிறது. விவகாரம் வெளியில் கசியாமல் இருக்க படுரகசியம் காத்து வருகின்றனர் நீலகிரி மாவட்ட போலீஸார்.
 நீலகிரி மாவட்டம் உதகை மத்திய(பி1) காவல்நிலைய ஆய்வாளராக பணிபுரிபவர் ரவீந்திரன். இதே நிலையத்தில் காவலர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். மலையாளியான இவர் கோத்தகிரியை சேர்ந்த படுகரின பெண் போலீஸை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவருக்கும் இரு குழந்தைகள் உள்ளன. மனைவி கோத்தகிரி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், சமீப காலமாக காதல் தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த பெண் போலீஸ், கணவரின் போக்கு குறித்து கணவர் பணிபுரியும் காவல் நிலைய ஆய்வாளர் என்ற முறையில் ரவீந்திரனிடம் புகார் செய்துள்ளார். 

புகார் அளிக்க வந்த மனைவியிடம் ரவீந்திரன் நெருங்கி பழகியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். 
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர், கணவருக்கு இரவுப் பணியை அளித்து விட்டு, ரவீந்திரன் கோத்தகிரி சென்றுள்ளார். 

இதை அறிந்த கணவர் கோத்தகிரி சென்ற போது, தனது வீட்டில் ஆய்வாளர் ரவீந்திரன் இருப்பது உறுதியாகியுள்ளது. 
வீட்டிலிருந்து ஆய்வாளரின் உடைகள் மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு காவலர் வெளியேறி விட்டார். 
இது தொடர்பாக மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார். அவர்கள் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் சமாதானமாக பேசி தீர்த்துக்கொள்ள முயற்சித்துள்ளனர். 

இதனால், ஆத்திரமடைந்த காவலர், ஆய்வாளரின் உடமைகளுடன் நேராக ஐஜியை சந்தித்து, நடந்ததை கூறி உடமைகளை அவரிடம் ஒப்படைத்து விட்டார். உடனடியாக ஐஜி, ஆய்வாளர் ரவீந்திரனை டுயூட்டிக்கு வர கூடாது என்று உத்தரவிட, ரவீந்திரன் விடுப்பில் சென்று விட்டார்.

ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், வெளியில் தெரிந்தால் ஒட்டுமொத்த காவல்துறைக்கே அவப்பெயர் ஏற்படும் என்பதால் சப்தமில்லாமல் பஞ்சாயத்து நடந்து வருகிறது. இதன் காரணமாக காவலர் தம்பதி குறித்து எந்த தகவலும் வெளியில் வராமல் இருக்க நீலகிரி மாவட்ட காவல்துறை ரகசியம் காத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பாவை நேரில் அழைத்து ஐஜி விசாரித்துள்ளார். 
எஸ்.பி.முரளிரம்பாவிடம் இது குறித்து கேட்ட போது, ‘சம்பவம் குறித்து விசாரித்து வருகிறேன். யாரும் புகார் அளிக்கவில்லை’ என்ற கூறி தன்னிலை விளக்கம் அளித்தார்.

விவகாரம் ஐஜிக்கு சென்று விட்டதால் ஆவேசமடைந்த எஸ்.பி., நகர டிஎஸ்பி திருமேனியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
உதகை நகர காவல்நிலைய ஆய்வாளரின் நடவடிக்கையால் சங்கடத்தில் ஆழ்ந்துள்ள நீலகிரி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் சப்தமில்லாமல் பஞ்சாயத்து செய்து வருகின்றனர். மேலும், ஆய்வாளர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்ற குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.


ஆர்.டி.சிவசங்கர்



பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்


பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்
[X] Close