[X] Close
 

லேட்டா வந்ததால சம்பளம் கட்: அரசு ஊழியர்களை அதிரவைத்த புதுவை முதல்வர்


pondy-cm-inspects-secretariat

படங்கள் எம்.சாம்ராஜ்

  • பாரதி
  • Posted: 16 Apr, 2018 13:06 pm
  • அ+ அ-

புதுச்சேரியில் குறித்த நேரத்திற்குள் பணிக்கு வராத அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய முதல்வர் நாராயணசாமி தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 புதுச்சேரியில் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான கோப்புகள் தேங்கி இருப்பதாக முதல்வர் நாராயணசாமிக்கு புகார்கள் வந்தன.  இந்நிலையில் இன்று காலை 9.15மணிக்கு தலைமை செயலகத்தில் தனியாக சென்று முதல்வர் நாராயணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 ஆய்வின் போது ஊழியர்களின் வருகை பதிவேடு, பணிக்கு காலத்தோடு வராத ஊழியர்களின் பெயரை குறித்துக் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார் மேலும் விடுமுறையில் சென்றவர்களின் விடுப்பு கடிதத்தையும் ஆய்வு செய்தார். முதல்வரின் ஆய்வின்போது பெரும்பாலான தலைமை செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்  காலத்தோடு பணிக்கு வாரததை கண்டு அதிருப்தி அடைந்தார்.

 ஆய்வை முடித்துக்கொண்டு சட்டசபையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி,  "தலைமை செயலகத்தில் பல துறைகளில் பணி புரிகிற ஊழியர்களை குறித்த நேரத்திற்குள் வருகிறார்களா என நேரிடையாக ஆய்வு மேற்கொண்டேன். அரசு அதிகாரிகள் காலத்தோடு 8.45 க்கும் பணிக்கு வரவில்லை என புகார் வந்ததை அடுத்து 9.30 அளவில் நேரிடையாக பார்வையிட்டேன்.

தலைமைசெயலகத்தில் பையோ மெட்ரிக் பொருத்தப்பட்டிருந்தாலும் வேலை செய்யவில்லை, 30 சதவிகித ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை அதனை ஊழியர்கள் பழுதாக்கியுள்ளார்கள்.

 குறித்த நேரத்திற்குள் வராத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை செயலருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
தலைமைசெயலகத்திலே இந்த நிலை என்றால் மற்ற அலுவல்கங்களில் எப்படி ஊழியர்கள் நேரத்தோடு வருவார்கள்.
காலத்தோடு அரசு ஊழியர்கள் வேலைக்கு வராதது வருத்தமளிக்கிறது,இன்னும் பல துறைகளுக்கு அமைச்சர்களுடன்  சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். 

அரசு ஊழியர்கள் பணியில் கவனம்செலுத்தி கோப்புகள் தேங்காமல் இருக்க பணிக்கு வரவேண்டும்,
காலத்தோடு வராத ஊழியர்களின் மீது அந்த துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. காலத்தோடு வராத ஊழியர்களின் மீது சம்பளம் பிடித்தம் போன்ற நடவடிக்கை எடுக்க தலைமை செயலருக்கு உத்தரவிடுவதாகவும்,
அரசு ஊழியர்கள் காலத்தோடு வராததால் கோப்புகள் தேங்கியுள்ளன இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் அனைத்து அரசு அலுவலகங்களில் பையோ மெட்ரிக் வைக்கப்படும் இதற்கான நிதியும் ஒதுக்கப்படும்.

அரசு அலுவலக வாகனங்களை தங்கள் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தும் அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

-செ.ஞானப்பிரகாஷ்

படங்கள்: எம்.சாம்ராஜ்

தொடர்புடைய செய்திகள்



பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்


பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்
[X] Close