[X] Close
 

என்னை மன்னித்துவிடு ஆசிபா: ட்விட்டரில் கமல் உருக்கம்


i-m-sorry-my-child-kamal-mourns-asifas-death

  • பாரதி
  • Posted: 13 Apr, 2018 10:23 am
  • அ+ அ-

"இந்த தேசத்தை உன்னைப்போன்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக உருவாக்காததற்காக என்னை மன்னித்துவிடு ஆசிபா" என ட்விட்டரில் வேதனை தெரிவித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில், 8 வயது சிறுமி ஒருவர் கூட்டு பலாத்காரத்துக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது அம்பலமாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து நடிகர் கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் மகளாக இருந்தால்மட்டுந்தான் உங்களுக்கு இது புரியுமா? ஆசிபாவை நான் எனது மகளாகவே பார்க்கிறேன். ஒரு ஆணாக, தந்தையாக, குடிமகனாக ஆசிபாவுக்கு அநீதி இழைக்கப்பட்டத்தில் கோபம் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு குழந்தாய். இத்தேசத்தை உனக்கு பாதுகாப்பானதாக உருவாக்கத் தவறிவிட்டோம். எதிர்காலத்திலாவது உன்னைப் போன்ற குழந்தைகளுக்கு இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க நான் போராடுவேன். உனக்காக துக்கம் அனுசரிக்கிறேன். உன்னை மறவேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

 
 



பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்


பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்
[X] Close