டீசல் மானியத்தை உயர்த்தி தர மீனவர் சங்கம் வேண்டுகோள்


சென்னை: மீனவர்களின் விசைப் படகுகளுக்கு வழங்கும் டீசல் மானியத்தின் அளவை நாளொன்றுக்கு 100 லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும். நாட்டுப் படகுகள், பைபர் படகுகளுக்கு வழங்கப்படும் டீசல் மானியத்தின் அளவை நாள் ஒன்றுக்கு 20 லிட்டராக உயர்த்த வேண்டும்.

இதேபோல், மண்ணெண்ணெய் பயன்படுத்தும் நாட்டு படகுகளுக்கு மானியமாக வழங்கப்படும் மண்ணெண்ணெய் நாளொன்றுக்கு 15 லிட்டராக அதிகரிக்க வேண்டும்.

மேலும், மீன்பிடி தடை காலத்தின்போது அரசு வழங்கும் நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை. எனவே, ஒரு குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து மீனவர் சங்கத்தின் தலைவர் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.